Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அடையாளத் திருட்டுக்கு மன்னிப்பு கேட்ட மலேசிய நிறுவனம் ! தமிழகத் தமிழர்களின் கனிவான கவனத்திற்கு !

வடை என்னும் தமிழர்களின் திண்பண்டத்தை மலாய் மொழியில் அடையாளப்படுத்தியது மலேசியாவில் உள்ள திண்பண்ட நிறுவனம். இந்த பெயர் மாற்றதிற்கு மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த மலேசிய நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது. வடையின் பெயரை இனி மாற்ற மாட்டோம் என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.

இப்படித் தான் தமிழர்களின் பல அடையாளங்கள் அந்நியர்களால் திருடப்படுகிறது. தமிழர்களின் படைப்பை இந்தியப் படைப்பு என்றும், தமிழர்கள் கட்டிய கோவில்களை சிற்பக் கலைகளை இந்திய கோவில் சிற்பக் கலைகள் என்றும் திருடப்படுகிறது. ஆனால் சல்லிக்கட்டு விளையாட்டு மட்டும் இந்திய விளையாட்டு அல்ல , அது மேற்கத்திய விளையாட்டு என்று பாஜகவின் அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார், அதற்கு பாஜக அரசு இதுவரை மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. மேலும் தமிழர்கள் வழங்கிய கொடைகளை இந்தியாவின் படைப்புகள் என்று கூறும் இந்திய அரசு , தமிழ் மொழியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க மறுத்து வருகிறது.

தமிழர்கள் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலை கூசாமல் பிரகதீசுவரர் ஆலயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அந்தப் பெயரிலேயே  அஞ்சல் தலை நாணயம் வெளியிட்டுள்ளது இந்திய அரசு . இது எவ்வளவு பெரிய அடையாளத்திருட்டு மற்றும் மோசடி. ஒரு வடையின் பெயரை மாற்றம் செய்யப்பட்டதற்கு மலேசிய தமிழர்கள் எதிர்வினை ஆற்றியுள்ளனர் . ஆனால் தமிழகத்தின் பெருமை மிக்க பல கோவில்கள் ஊர்களின் பெயர்களை ஆரியப் பெயர்களாக சத்தமில்லாமல் மாற்றியுள்ளனர் . இதற்கு எந்த விதமான எதிர்வினையும் தமிழகத்தை ஆண்ட திராவிட அரசுகள் ஆற்றவில்லை. இப்படியான அடையாளத் திருட்டுக்கு திராவிடமும்  துணை போயுள்ளது என்பது தான் வேதனை. தமிழர் திருநாளை திராவிடத் திருநாளாக கொண்டாடும் அமைப்புகளை தமிழக அரசு கண்டிக்கவில்லை. இது போல ஆரியமும் திராவிடமும் செய்த அடையாளத் திருட்டுப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

எதிர்வினையாற்றி வடையின் பெயரை மீட்ட மலேசிய தமிழர்களுக்கு பாராட்டுகள். முதல்கட்டமாக தஞ்சை பெரிய கோவிலின் பெயரை பெருவுடையார் கோவில் என்று உலகம் முழுவதும் அடையாளப்படுத்த தமிழக அனைத்து ஆவணங்களிலும் திருத்தும் கொண்டு வரவேண்டும். இனியும் அடையாளத் திருட்டை தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறோம் .






[vuukle-powerbar-top]

Recent Post