Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழர்களுக்கு சில தீர்வுகளை முன்வைத்து வருகிறது புதிய அரசு. தமிழர்கள் விருப்பும் தமிழீழ தீர்வை தர முடியாது மற்றபடி அதிகாரப் பகிர்வு, ராணுவம் விலகப்படுதல் போன்றவற்றை நடைமுறை படுத்துவோம் என பிரதமர் ரணில் கூறியுள்ளார். .
ராஜபக்சே இருந்த போது இதை கூட சொல்லவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஈழத் தமிழர்களுக்கு இனியாவது சில நன்மைகள் நடக்க வாய்ப்புள்ளது .  மேலும் புதிய அரசவையில் ஒன்பது தமிழ் அமைச்சர்கள் தேர்வாகி உள்ளதும் குறிப்பிடத் தக்கது. ஈழத் தமிழர்களுக்கு இலங்கை  அரசு இப்போது  அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றினால் அந்த அளவிற்கு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதை நாம் உணரவேண்டும். இந்தியாவில் ஒரு நடுவண் அமைச்சர்  கூட தமிழர்  இல்லை.

இந்தியாவின் ஆட்சியின் கீழ் தமிழகம் இழந்த கொண்டிருப்பது கொஞ்சமல்ல. தமிழ் மொழியை  அழித்து இந்தியை சமஸ்கிருதத்தை திணிப்பது . தமிழகத்தில் மீத்தேன், அணுஉலை , நியூற்றினோ , கெயில் குழாய்கள் நிறுவி மண்ணை அபகரிப்பது , தமிழ் இனத்தை  அதிகாரமில்லாத இனமாக மாற்ற வடவர்களை திட்டமிட்டு தமிழகத்தில் குடியமர்த்துவது . இவையெல்லாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு . ஈழத் தமிழர்களுக்கு நாம் குரல் கொடுக்கும் அதே வேளையில் தமிழகத்தை காப்பாற்றும் செயல் திட்டத்தை நாம் முன்வைக்க வேண்டும். இப்போது செய்யவில்லை என்றால் ஈழத் தமிழர்களின் நிலையை விட இங்குள்ள தமிழர்களின் நிலை மோசமாகிவிடும். தமிழர்கள் சிந்திப்போமாக !




[vuukle-powerbar-top]

Recent Post