Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம். அதன்  மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்புக்கு கண்டனம் !

இதை விட ஒரு தமிழர் விரோதப் போக்கை தமிழக அரசு கடைபிடிக்க முடியாது. புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு தமிழக அரசு தரப்பில் ஏற்றுக் கொண்ட காரணங்கள் எவையும் ஏற்புடையது அல்ல.

பிரபாகரனின் மகன்கள் சார்லஸ் ஆன்டனி, பாலச்சந்திரன் பெயர் பொறித்த கல்வெட்டும் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இன்னும் தங்கள் நடவடிக்கைகளை தொடர்வது இதன்மூலம் தெரிகிறது. தமிழ்நாடு விடுலைப்படை  என்ற புலிகள் ஆதரவு இயக்கத்தினர் பல தலைவர்களை கொலை செய்ய வெடிகுண்டு வைத்துள்ளனர். மேலும் பிரபாகரன் பிறந்த நாளை அகதிகள் முகாமில் ஈழத் தமிழர்கள் கொண்டாடி உள்ளனர். தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவான குரல் ஓங்கி உள்ளது. இப்படியான பல காரணங்களை ஏற்றுக்கொண்டு புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடித்துள்ளது தமிழக அரசு. 

மேற்கூறிய காரணங்கள் எவையும் புலிகள் இயக்கம் தமிழகத்தில் செயல்படுவதற்கான அறிகுறியை காட்டவில்லை. பொதுமக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்றால் அது பொதுமக்கள் அந்த இயக்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால் மக்கள் தங்களுடைய தலைவரின் மீது வைத்துள்ள மதிப்பை காட்டுகிறது. ஏதோ ஒரு இயக்கம் வெடிகுண்டு வைத்தது என்றால் அதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும். 

இப்படியாக புலிகளை தடை செய்வதில் எந்த ஒரு நியாயமான காரணங்களும் இருப்பதாக தெரியவில்லை. தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பெயரை சொன்னாலே புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலே ஆகும். இந்திய அரசு சிங்கள அரசுடன் கூட்டு சேர்ந்து பல லட்சம் தமிழர்களை கொலை செய்ய துணை போனதே, இதற்கு நியாயமாக இந்திய அரசை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் அல்லவா? இந்திய அரசை கண்டித்து ஒருமனதான தீர்மானம் இயற்ற வேண்டும் அல்லவா ? இதை செய்வதை விட்டு விட்டு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழக அரசும் துணை போவது முற்றிலும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும். 

2009 க்கு பிறகு புலிகள் எந்த விதமான ஆயுதப் போராட்டங்களிலும் ஈடுபடவில்லை என்பது உலகிற்கே தெரியும். இந்திய அரசுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது தமிழக அரசு புலிகள் மீதான தடையை நீடிக்க ஒத்துழைப்பு நல்கியது கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் உணர்வுள்ள கட்சிகளும் தமிழக அரசை கண்டிக்க முன்வர வேண்டும். புலிகள் மீதான தடையை தமிழக அரசு உடனே விலக்குதல் வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழ்நாடு) கேட்டுக்கொள்கிறது.    


 
[vuukle-powerbar-top]

Recent Post