Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய துணைகண்டத்தில் உள்ள பல்வேறு இனங்களுக்கு தாய் இனம் தமிழ் இனமே !!

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடும் கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி”        

இது சிலப்பதிகாரத்தில் வரும் வரிகள். இப்பாடலின் அடிப்படையில் பண்டைய காலத்தில் இந்தியா முழுவதும் தமிழர்களே பரவி வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இது மட்டுமல்லாது இந்திய துணைகண்டம் முழுவதும் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் மொழியிலேயே இருப்பதை காண முடிகிறது. கொற்கை, பொருணை, காவிரி போன்ற பல தமிழ்ப் பெயர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் பல ஊர்ப்பெயர்களாக  இருக்கிறது. அதை இன்றும் நாம் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில்  காணமுடிகிறது. இந்தியா  முழுவதும் தமிழ் கல்வெட்டுகள் பரந்துபட்டு காணமுடிகிறது. இந்தியாவில்  தற்போது  வாழும் 70 விழுக்காடு மக்கள் ஒரு காலத்தில் தமிழர்களே. பல்வேறு அந்நிய படையெடுப்புகளால் தமிழ் மொழியும் இனமும் சிதைக்கப்பட்டு பல்வேறு மொழிகளும் மொழி சார்ந்த இனங்களும் உருவாகின. இருப்பினும் இவர்கள் அனைவருக்கும் தாய் இனமாக விளங்குவது தமிழினமே. தாய் மொழியாக விளங்குவது தமிழே.

மேலும் தமிழர் மதத்தில் இருந்தே ஆரியம், சமணம், பௌத்தம் முதலான  மதங்கள் தோன்றின. ஆகவே இந்த மதங்களை பின்பற்றுபவர்களும்  ஒரு காலத்தில் தமிழர் மதத்தை சார்ந்தே  வாழ்ந்து வந்துள்ளனர். தமிழர் மதம் என்பது ஒரு வாழ்வியல் நெறி. இதற்கு  அக்காலத்தில் ஒரு பெயர் இல்லை.  இந்நெறியை வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்பவர் தமிழர் மதத்தை சார்ந்தவராக கருதப்படுகிறார்கள். தற்போது எந்த மதத்தை தழுவினாலும், எந்த மொழியை தாய் மொழியாகக் கொண்டாலும்,  இவர்கள் அனைவரும் மீண்டும் தமிழினத்திற்கு வரலாம். தமிழினத்தில் மீண்டும் சேரலாம்.

மீண்டும் தாய் இனத்தில் எவ்வாறு சேர்வது?

௧. தமிழை தாய் மொழியாக ஏற்பது. தமிழர் என்ற அடையாளத்தையே முதலும் முடிவான அடையாளமாகக் கருதுவது. வீட்டிலும் வெளியிலும் தமிழிலேயே பேசுவது.
௨. குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களையே சூட்டுவது
௩. சமய மத வழிபாட்டில் தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்துவது
௪. திருமணம் முதலிய இல்ல நிகழ்சிகளை தமிழ் மொழியில் மட்டுமே நடத்துவது.
௫. தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும்  எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது.
௬. தமிழ் வழியில் நம் பிள்ளைகளுக்கு கல்வி கொடுப்பது.
௭. தமிழ் மண்ணையும் , மக்களையும், மொழியையும் பண்பாட்டையும்  போற்றுவது.
௮. பிற மொழிகள் கலக்காது கூடுமான வரை தூய தமிழில் பேசுவது.
௯. உலகப் பொதுமறையான திருக்குறளை வாழ்வியல் மறைநூலாக ஏற்பது .
௧௦. தமிழர் இனத்திற்கே உரிய சிறப்பான இயற்கையை போற்றிப் பேணுவது.
௧௧. பிறப்பால் மனிதர்களுள் ஏற்றத் தாழ்வுகள் காண்பது கண்டிப்பாக கூடாது.

மேற்கண்டவற்றை மனமார ஏற்று பின்பற்றக்கூடிய எவரும் தாய் இனத்திற்கு திரும்பலாம்.

தாய் இனத்திற்கு வந்தால் என்ன கிடைக்கும் ? அறிவு, ஆற்றல், தன்மதிப்பு , கெடுதல் இல்லாத வாழ்வு, தன் நிறைவு, தூய்மை, வாய்மை, இயல்பு நிலை, இயற்கை சார்ந்த வாழ்வியல்,  விடுதலை என அனைத்தும் கிடைக்கும்.
தாய் இனம் திருப்புவோம் !! தமிழர்களாக தலை நிமிர்வோம்  !

[vuukle-powerbar-top]

Recent Post