Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கருணாநிதி கொண்டு வந்த தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு - இந்து முன்னணி இராமகோபலன்.

தமிழர்களின் புத்தாண்டு எது என்று தீர்மானிக்க வேண்டியது ஆரியர்களும் அல்ல திராவிடர்களும் அல்ல. தமிழர்களே தமிழ்ப் புத்தாண்டு எது என தீர்மானிக்க வேண்டும். மேலும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கருணாநிதி சட்டம் இயற்றினாரே தவிர அது அவருடைய கண்டுபிடிப்பு அல்ல.

அறிவுக்கு ஒவ்வாத ஆரிய கட்டுக் கதைகளை புறந்தள்ளி தமிழர் வாழ்வியலுக்கு ஒத்த புத்தாண்டை வள்ளுவர் ஆண்டாக (தை ) சுறவம் ஒன்றாம் தேதியில் தொடங்க வேண்டும் என்று மறைமலை அடிகளார் தலைமையில் 1938 ஆம் ஆண்டே முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தான் சுறவம் ஒன்றாம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. இருப்பினும் சுறவம் ஒன்றாம் தேதியும், சித்திரை ஒன்றாம் தேதியும் தமிழ்ப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரும் நாட்கள் அல்ல அவை சமஸ்கிருத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரும் நாட்களே ஆகும். இரண்டுமே துல்லியமான வானவியல் அடிப்படையிலான நாட்கள் அல்ல.

தமிழ்ப் புத்தாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு நாளில் வருவது அல்ல. வானவியல் மாற்றத்தின் அடிப்படையில், குளிர் கால சூரிய திருப்பத்தின் பிறகு தோன்றும் மூன்றாம் பிறையின் அடுத்த நாளே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது என தமிழர் வரலாற்று ஆய்வாளர் தென்னன் மெய்மன் பெருந்தச்சன் அவர்கள் சங்க கால இலக்கிய வானவியல் ஆய்வுகள் மூலம் ஆதாரப்பூர்வமாக விளக்கியுள்ளார். மேலும் தமிழர் புத்தாண்டு எது என தமிழ்ச் சான்றோர்கள் தீர்மானிக்கும் நிலை உருவாகி, ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் புத்தாண்டு பிறக்கிறது என்பதை தமிழக அரசே தமிழ் மக்களுக்கு அறிவிக்கும் நிலை உருவாக வேண்டும் என்றும் திரு.தென்னன் மெய்மன் கூறியுள்ளார்.

பல்சக்கர வானவியல் அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டை தமிழக அரசு அறிவிக்கும் காலமே தமிழ்நாட்டை தமிழர்களே ஆட்சி செய்யும் காலம் என்றும் கருதப்படுகிறது. தமிழர்ப் புத்தாண்டுக்கும் தமிழர் ஆட்சிக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே வந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு தமிழர்களின் கையில் இருந்து விலகிய காலம் தமிழர்கள் கையில் இருந்து ஆட்சி அதிகாரமும் விலகியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் புத்தாண்டை தமிழர்களே தீர்மானிப்போம். அந்தப் பொறுப்பை தமிழர் அல்லாதவர்களிடம் இனி ஒப்படைக்க முடியாது.

[vuukle-powerbar-top]

Recent Post