Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியை மட்டுமே தமிழர்கள் எதிர்க்கிறீர்களே , ஏன் அந்நிய மொழியான ஆங்கிலத்தை எதிர்ப்பதில்லை என்று இந்தி ஆதரவாளர்கள் இப்போது பலமாக பரப்புரை செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு புரியும்படி பதில் அளிக்க வேண்டிய கடமை நமக்குள்ளது .

தமிழ்த் தேசிய இனத்தின் மீது இரு பெரும் மொழிச் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒன்று ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம். இன்னொன்று இந்தியர்கள் நம் மீது திணிக்கும் இந்தி.  ஆங்கிலம் என்பது இந்தியர்கள் மீதும்  தமிழர்கள் மீதும் பொதுவாக சுமத்தப்படும் ஒரு சுமை ஆகும் . இந்தி என்பது 'இந்தி' மக்களின் தாய் மொழியாதலால்  அவர்களுக்கு அது சுமை இல்லை. அதனால் அவர்களுக்கு ஆங்கிலம் படிக்கும் ஒரே ஒரு சுமை தான் உள்ளது. ஆனால் தமிழர்களுக்கு அவ்வாறு இல்லை. தமிழர்கள் தங்கள் தாய் மொழியை படிப்பதுடன் ஆங்கிலத்தையும் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கூடுதலாக இந்தியையும் படிக்க வேண்டும் என்று இந்தியர்களும் கட்டாயப்படுத்துகிறார்கள். ஆங்கிலம் படித்த காரணத்தால் வெளி உலகத்தோடு தமிழர்கள் தொடர்பு கொள்ளவும் முடிகிறது . இந்தியர்களோடும் தொடர்பு கொள்ள முடிகிறது , காரணம் இந்தியர்களும் ஆங்கில மொழியை படிக்கிறார்கள். இந்தியர்களுக்கு மட்டும் ஒரு மொழி சுமையும் தமிழர்களுக்கு இரண்டு மொழி சுமையும் இருப்பது நியாயம் அல்ல. அனைவருக்கும் பொதுவாக ஆங்கில மொழி சுமை இருப்பதை நியாயப்படுத்தலாம். அல்லது இந்தியர்கள் தமிழ் மொழியை படித்தாலும் நியாயப்படுத்தலாம்.

மொழித் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் முதலில் தமிழர்கள் ஒன்று கூடி துருக்கி மொழியான இந்தியை விரட்ட வேண்டும். பின்னர் இந்தியர்களும் தமிழர்களும் சேர்ந்து ஆங்கிலத்தை விரட்டலாம். அது தான் சரியான நகர்வாக இருக்க முடியும். காரணம் தமிழர்களுக்கு இந்தியும் ஆங்கிலமும் அந்நிய மொழிகளே. ஒரு அந்நிய மொழியை வைத்து இன்னொரு அந்நிய மொழியை விரட்டலாம். பின்னர் இரண்டு அந்நிய மொழிகளையும் நாம் ஒன்று சேர்ந்து விரட்டலாம். முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்பது போலத்தான் இது. இந்தி ஆதரவாளர்கள் இனியாவது தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பை புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறோம். இந்திக்கு நிகராக தமிழையும் பிற மொழிகளையும் ஆட்சி மொழியாக்க ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்.


[vuukle-powerbar-top]

Recent Post