Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அறிவியல் மாநாடா அல்லது ஆர் எஸ் எஸ் மாநாடா ?

எல்லாவற்றையும் கண்டுபிடித்தது இந்தியாதான், சமஸ்கிருதத்தில் அதற்கான குறிப்பு உள்ளது என்று அறிவியல் ஆய்வு கட்டுரைகளை கொடுத்துள்ளனர் இந்துத்வா அறிவியலாளர்கள். இதை தெரிந்து கொள்ள வேதங்களை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.  வானூர்தி, அறுவை சிகிச்சை , தகவல் தொழில் நுட்பம் என அனைத்தும் கண்டுபிடித்தது இந்திய முனிவர்கள் தான் என்று மும்பையில் நடந்த அறிவியல் மாநாட்டில் பேசியுள்ளனர் சில ஆய்வாளர்கள். இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியுள்ளார்.  இவர்கள் பேசுவதை பார்த்தால் இவர்கள்  இந்தியர் என்று குறிப்பிடுவது வேத மகரிசிகள் மட்டும் தான் என்று தெளிவாகிறது . ஒரு காலத்தில் இந்தியா முழுதும் வேத முனிவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தது போலவும் , அவர்கள் மட்டுமே முழு அறிவுக்கும் சொந்தக் காரர்கள் போலவும் ஆர்.எஸ்.எஸ் கொள்கையாளர்கள் பேசி வருகின்றனர்.  சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் மனு தருமமும், அந்த மனு தர்மம் கட்டிக் காட்டும் வேதமும் தான் இந்தியாவின் அறிவு என்றால் அப்படிப்பட்ட அறிவே யாருக்கும் தேவை இல்லை. வேத நெறியாளர்கள் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பண்பட்ட தமிழ் நாகரீகம் செழித்து விளங்கிற்று என்று உண்மையை ஆரிய மதத்தினர் ஏற்க மறுக்கின்றனர். தமிழ் அடையாளத்தை சிதைக்க முயல்கின்றனர் . அதன் தொடர்ச்சியாகத் தான் இன்றுவரை தமிழினத்தின், தமிழ் மொழியின் உரிமையை நசுக்கி வருகின்றனர் ஆரிய மத அரசியல்வாதிகள். இந்துத்வா அரசியல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆபத்து என்பதை அனைவரும் உணரும் காலம் வந்துவிட்டது என்பதை மோடி அரசு உறுதி செய்து வருகிறது .

  
[vuukle-powerbar-top]

Recent Post