Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் திருநாளை திராவிடர் திருநாளாக கொண்டாடும் திராவிட அமைப்புகளுக்கு கண்டனம் - தமிழர் பண்பாட்டு நடுவம்.

சங்க காலம் முதலே பொங்கல் திருவிழா தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த மதத்தையும் சாராதாக ஒரு விழாவாகவும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இத்திருவிழா தமிழர்களால் கொண்டாப்படுகிறது. இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கான விழாவாகும். இப்படியான பெருமைக்கு உரிய பொங்கல் திருநாளை திராவிடர் திருநாள் விழாவாக திராவிடக் கழகம் உள்ளிட்ட  திராவிட அமைப்புகள் கொண்டாடுவதை தமிழர்கள் ஏற்க முடியாது. இது தமிழர்களின் அடையாளத்தை சிதைப்பதாக உள்ளது. தமிழ் மொழியையும் தமிழினத்தையும் கொச்சைப்படுத்தி வரும் திராவிட அமைப்புகள் தமிழர் திருவிழாவை திராவிடத் திருவிழாவாக கொண்டாட முனைவது தமிழர்களை ஏமாற்றும் செயலாகும். சில இந்துத்வா சக்திகளும் பொங்கல் திருவிழாவை இந்து மதப் பண்டிகையாக கொண்ட முயல்கின்றன. இதை எப்படி நாம் ஏற்க இயலாதோ அதே போலத் தான் தமிழர் திருநாளை திராவிடத் திருநாளாக பெயரிட்டு அழைப்பதை தமிழர்கள் முடியாது. திராவிடர் என்ற அடையாளம் தமிழர்களுக்கு எந்த காலத்திலும் இருந்தது அல்ல. சங்க இலக்கியங்களிலும் அத்தகைய சொல் கையாளப்பட்டதும் இல்லை. திராவிடம் என்ற சொல் தமிழ்ச் சொல்லும் அல்ல. அப்படி இருக்கும் போது தமிழர் நாளை திராவிட திருநாள் என்று அழைப்பதை தமிழர்கள் எவ்வாறு ஏற்க இயலும்?    

தமிழர் திருநாளான  பொங்கல் நாளை தமிழர் திருநாள் என்றே தமிழர்கள் அனைவரும் அழைக்க வேண்டும். வேறு எந்தப் பெயரைக் கொண்டு அழைத்தாலும் அதை தமிழர் அனைவரும் கண்டிக்க வேண்டும். அந்த வகையில்  தமிழர் திருநாளான பொங்கல் விழாவை திராவிடத் திருநாள் விழாவாக கொண்டாடும் திராவிடக் கழகம் உள்ளிட்ட திராவிட அமைப்புகளுக்கு தமிழர்கள் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது தமிழர் பண்பாட்டு நடுவம். சாதி மத பேதமின்றி சமத்துவ திருநாளாக தமிழர்கள் அனைவரும் பொங்கல் திருநாளை அவரவர் இல்லங்களில் கொண்டாடி மகிழுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.




[vuukle-powerbar-top]

Recent Post