Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மோடி ஒபாமா இடையே நேரடி தொலைதொடர்பு இணைப்பு (Hotline) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மோடி எந்த நேரத்திலும் அமெரிக்க அதிபருடன் எந்த விதமான காத்திருப்பும் இல்லாமல் உடனடியாக  உரையாடலாம். இந்த வசதி இப்போது மோடியின் அலுவலகத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டின் பாதுகாப்பு குறித்தும், முக்கிய தகவல்களை பரிமாறவும் இந்த நேரடி தொலைதொடர்பு உதவும். இருநாடுகளுக்கும் இடையே இப்போது நட்பும் நம்பிக்கையும் அதிகரித்து உள்ளதால் இந்த  வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.    

அமெரிக்க அதிபருடன் மோடி நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் சரி, எப்போது மோடி இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன்  நேரடி தொடர்பை ஏற்படுத்துவார் ? மாநில முதல்வர்களுடன் எந்த வித காத்திருப்பும் இல்லாமல்  நேரடியாக மோடி பேச  முன்வருவாரா ? தமிழகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து நேரடியாக பேசுவாரா  ? மீனவர்கள் சிறைபிடிப்பு, மீத்தேன் போராட்டம், நியூட்ரினோ ஆய்வு, சல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை, இந்தி சமற்கிருத திணிப்பு போன்ற சிக்கல்களை குறித்து மோடி உடனடியாக தமிழக முதல்வருடன் பேச  ஒரு தொலை தொடர்பு இணைப்பை உருவாகித் தருவாரா ?

அமெரிக்க அதிபருடன்  இந்திய பிரதமர் பேச உடனடி வசதி ஏற்படுத்திக் கொடுத்தது போல இந்திய பிரதமருடன் நேரடியாக பேச  மாநில முதல்வருக்கும் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இனியும் தமிழக முதல்வர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் அவலம் தொடரக் கூடாது.    

[vuukle-powerbar-top]

Recent Post