Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை மெரினா கடற்கரையில் 12 ஆயிரம் மாணவர்கள் விவேகானந்தர் வேடம் அணிந்து நடை பயணம் ! இந்துத்துவா அமைப்புகள் ஏற்பாடு.

நம்முடைய கேள்வி : தமிழகத்தில் விவேகானந்தரை முன்வைத்து  பரப்புரை செய்ய  வேண்டிய அவசியம் என்ன ?

தமிழ்நாட்டில் தமிழ்ச் சான்றோர்களால் சொல்லப்படாத  அறத்தை விவேகானந்தர் சொல்லிவிட்டாரா ? உலகப் பொதுமுறை திருக்குறளும், வள்ளலார் வழங்கிய உலக மார்க்கமாகிய சன்மார்கத்தை விடவும் சிறப்பான கருத்துக்கள்  விவேகானந்தர் சொல்லிவிட்டாரா ?

பிராமணனாக பிறப்பதே உயர் பிறப்பு என்றும், ஒருவன் பிராமணனாக பிறக்க வேண்டும் என்றால் ஏழு பிறப்புகள் எடுக்க வேண்டும் என்று கூறி மனு தர்மத்திற்கு உயிர் கொடுத்தவர் விவேகானந்தர். மேலும் தமிழகம் வரை வந்த விவேகானந்தர் இறுதி வரை திருக்குறளையும் தமிழர் மதத்தின் ஒப்பற்ற உலக தத்துவத்தையும் படிக்காமலே திரும்பி விட்டார். தமிழர் செய்த உதவியால் அமெரிக்க பயணத்தை மேற்கொண்ட  விவேகானந்தர் , அமெரிக்கா சென்று ஆரிய மதத்தின் பெருமையை பேசினாரே தவிர திருக்குறளைப் பற்றியும் சைவ திருமுறைகள் பற்றியும், தொல்காப்பியர், ஒளவை, வள்ளலார் வழங்கிய அறங்களை பற்றியும் இறுதி வரை பேசவில்லை . தமிழின் பெருமையை பற்றி அவர் அறிய முற்படவுமில்லை. இறுதிவரை அவரது  ஆசான் இராமகிருட்டினர் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகவே இருந்து புற்றுநோய் வந்து மடிந்தார். விவேகானந்தர் இறுதி வரை புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி காசநோய், இரைப்பு நோய், மூச்சுத் திணறல் கோளாறு போன்ற கடும் நோய்களுக்கு ஆளாகி இறந்தார்.

இப்படிப்பட்டவரை இந்திய இளைஞர்களின் வழிகாட்டி போல இந்துத்வா அமைப்புகள் சித்தரித்து விவேகானந்தர் பெயரில் பேரணி, கூட்டங்கள் அமைத்து தமிழ்த் தேசிய அடையாளங்களை சிதைக்கும் வேலைகளை செய்து வருகிறது. இப்படியான நடவடிக்கைகளுக்கு பல பள்ளிகளும் ஆதரவு தருவது தான் வேதனை.

தமிழ்ச் சான்றோர்கள் வழங்கிய ஒப்பற்ற உலக அறங்களை மாணவர்களிடையே எடுத்துச் செல்வதே நல்ல சிறப்பான சமூகத்தை உருவாக்கும். மதவாதத்தை, மனுதர்மத்தை, மாணவர்களிடம் எடுத்துச் செல்வது மக்களிடைய சமூக சீர்க்கேட்டையே விளைவிக்கும். இந்துத்வா மனு தர்ம கோட்பாட்டின் அடிப்படையில்  மாணவ சமூகம் உருவானால் நம்முடைய மொழியும், மண்ணும், இயற்கையும் , பண்பாடும்  நம் கண் முன்னே அழிக்கப்படும் போது அதற்கு இம்மாணவர்களும் துணை நிற்பார்கள். 
[vuukle-powerbar-top]

Recent Post