Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தில்லி முதல் திருவரங்கம் வரை பாஜகவிற்கு மக்கள் புகட்டிய பாடம் ! 

2016 ல் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று கூறிவரும் பாஜகவிற்கு திருவரங்கத்தில் கிடைத்த வாக்குகள் சுமார் 5000 தான். அதாவது மொத்த வாக்குகளில் 2.5 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பாஜக பெற்றுள்ளது. அதிலும் பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் போட்டியிடாத நிலையில் தான் பாஜக இந்த வாக்கு எண்ணிக்கையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இக்கட்சிகள் எல்லாம் போட்டியிட்டு இருந்தால் இப்போது கிடைத்திருக்கும் வாக்குகளில் பாதி கூட பாஜக பெற முடியாது என்பதே உண்மை. பாஜகவிற்கு தனியே தமிழகத்தில் வாக்குவங்கி இல்லை என்பதை முதலில் பாஜகவும் இந்துத்வா அமைப்புகளும் உணரவேண்டும். தொலைகாட்சி நிகழ்சிகளில் எல்லோரையும் முரட்டும் தொனியில் பேசுவது, ஆணவத்தில் பிறரின் உணர்வுக்கு மதிபளிக்காமல் இருப்பது, ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பாஜகவில் இணைந்து விட்டதாக பொய்ப் பரப்புரை செய்வது போன்ற செயல்களை இனியாவது பாஜக கைவிட வேண்டும். தமிழர் விரோதப் போக்கை இத்துடன் நிறுத்திவிட்டு தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் சில நல்ல செயல்களை வரும் காலங்களில் செய்தால் மட்டுமே பாஜக தேர்தலில் வைப்புத் தொகையை தக்க வைக்க இயலும். 
[vuukle-powerbar-top]

Recent Post