Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈழத் தமிழர் பெயரை சொல்லி ஒரு பெரும் பணமோசடி நடந்து வருகிறது. தமிழீழ உணர்வாளர்களின் கவனத்திற்கு !!

அண்மையில் நண்பர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு மண்டபம் முகாமில் உள்ள ஒரு முன்னாள் போராளிக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பெட்டி வருகிறது , அந்தப்  பெட்டியை வாங்கி நீங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். பெட்டி கொடுக்கும் நபருக்கு ரூபாய் 4500 கொடுத்தனுப்ப வேண்டும் என்றும் பிறகு மண்டபம் முகாமில் இருந்து இரண்டு நாட்களில் அந்தப் போராளி பணத்தை கொடுத்து பெட்டியை பெற்றுக் கொள்வார் என்று சொன்னார். இந்த செய்தியை கேட்டவுடன் நான் பெட்டியை வாங்கி வைக்க முடியாது என்று மறுத்து விட்டேன்.

ஆனால் இதே போல செய்தியை பலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நண்பர்கள் பலரும் ஒரு போராளிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பெட்டியை வாங்கி வைத்துள்ளனர் . பணத்தை கொடுத்துள்ளனர். இப்போது பெட்டியை கொடுத்தனுப்பிய நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்தை ஏமாந்தவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இதில் முகநூல் வழியாக  https://www.facebook.com/profile.php?id=100004323856406&fref=ts இந்த முகநூல் கணக்கில் இருந்து உதவி கேட்டு பலருக்கும் அழைப்பு வந்துள்ளது . இந்த மோசடியில் இவர் ஒருவர் மட்டுமே பங்கேற்கவில்லை அல்ல என்று தெரிகிறது. ஒரு குழுவாக இவர்கள் செயல்படுகிறார்கள். யாரெல்லாம் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு இந்த குழு ஏமாற்றுகிறது. தமிழீழ உணர்வாளர்கள் இது போன்ற உதவிகள் வேண்டும் என்று யாராவது கேட்டால் தயவு செய்து ஏமாறா வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் குருதி சிந்தி தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த போராளிகளின் பெயரை சொல்லி இப்படியான ஏமாற்று வேலை நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இப்படியான மோசடி வேளையில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த இனத்திற்கும், தமிழீழ மண்ணிற்கும் துரோகம் இழைக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  



 


தமிழ்நாடு தமிழர்தேயம் 
[vuukle-powerbar-top]

Recent Post