Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன அடையாளத்துடன் கேரளாவில் நடைபெற்ற மாபெரும் நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காதது ஏன் ?

திருவாதிரைகளி என்று ஒரு நடன விழாவை நடத்தி  கின்னஸ் சாதனையை  செய்துள்ளனர் கேரளத்தவர்கள். இப்படியான ஒன்று கூடலின்  மூலமாக தங்கள் இனக்கட்டமைப்பை  உறுதி செய்கின்றனர் மலையாளிகள். ஒரே விதமான  நடன அசைவுகள், கேரள பாரம்பரிய உடை, சிகை அலங்காரங்கள் என அனைத்திலும் ஒன்றுபட்டு கேரளப் பெண்கள் இச்சாதனையை செய்து முடித்துள்ளனர். இந்த நடனத்தை நிகழ்த்திக் காட்டியதின் மூலம் உலகின் மிகப்பெரிய ஒன்றுபட்ட நடன நிகழ்ச்சி இது தான் என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ளனர் மலையாளிகள் (காணொளி இணைப்பு )

https://www.facebook.com/video.php?v=1015087118506139&set=vb.500235786657944&type=2&theater

ஆனால் தமிழகத்தில் மட்டும் 50000 இளைஞர்களை ஒன்று கூட்டி  இந்திய தேசிய கொடியை அவர்களின் தலையில் சுமக்க வைத்து இந்திய தேசியப் பற்றை வளர்த்துள்ளனர் தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சி ஊடங்கங்களும் அரசு சாரா பெரு நிறுவனங்களும். இதன் மூலம் தமிழர்கள் என்ற அடையாளத்தை திட்டமிட்டு மழுங்கடித்துள்ளனர்.

கேரளாவிலும் பிற தேசங்களிலும் இனத்தின் அடையாளம் அவர்களால் முதன்மைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இனத்தின் அடையாளம் மறைக்கப்படுகிறது. காரணம் இங்குள்ள ஊடகங்களும் நிறுவனங்களும் தமிழர்கள் வசம் இல்லை என்பது தான். தமிழகத்தில் நடக்கும் மாபெரும் ஒன்று கூடல் அனைத்தும் இந்திய தேசிய அடையாளுடன் மட்டுமே நடக்கிறது. இன அடையாளத்துடன் எந்த பெரிய நிகழ்வும் தமிழகத்தில் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனியாவது தமிழர்களின் இன அடையாளத்துடன் உலக அளவில் நாம் புதிய சாதனைகளை படைக்க முன்வர வேண்டும்.

[vuukle-powerbar-top]

Recent Post