Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தற்காலத்தின் தேவை திராவிடமா ? தமிழ்த் தேசியமா ? வரலாற்று சிறப்பு மிக்க விவாதம் , தமிழர்கள் அனைவரும் கேட்க வேண்டியது ..

அண்மையில் சங்கம் 4 நிகழ்ச்சியில் திராவிடத்திற்கு ஆதரவாக சுபவீயும் , தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக மணியரசன் ஐயாவும் நேருக்கு நேர் விவாதம் செய்துள்ளனர். அரங்கம் முழுவதும் இரு தரப்பு ஆதரவாளர்களும் இந்த விவாதத்தை உற்று கவனித்தனர். திராவிடம் வேறு தமிழ்த் தேசியம் வேறு அல்ல என்று தொடங்கிய சுபவி மெல்ல மெல்ல திராவிடக் கருத்தியல் தான் தற்காலத்திற்கு மிகவும் தேவை என்ற வாதத்தை முன்வைத்தார். அவருக்கு பிறப்பு பேசிய மணியரசன் ஐயா , திராவிடம் என்ற சொல்லும் தேவையில்லை, திராவிடம் என்ற கருத்தியலும் தமிழகத்திற்கு தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்துப் பேசினார். பெரியாரின் இனப்பகை கருத்தை முன்வைத்துப் பேசிய மணியரசன் ஐயா , பெரியாரின் முன்னுக்குப் பின் முரணான தமிழ்த் தேசியத்திற்கு எதிரான செயல்பாடுகளை சுட்டிக் காட்டுகையில் அரங்கில் உள்ள பெரியார் பக்தர்கள் பொங்கி எழுந்து விட்டனர்.

சுபவீ ஒரு பேராசிரியராக இருந்தும் அவருக்கு இன்னும் தமிழ்த் தேசியத்தின் ஆழமான புரிதல் வரவில்லை என்பது அவரது பேச்சில் எதிரிட்டது. சில அடிப்படை அறிவு கூட இல்லாமல் , முழுவதும் திராவிட மத போதைக்கு அடிமையானவர் போல பெரியார் கடவுளை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கலாமல் பேசினார். சுபவீ  கேட்ட சில அபத்தமான கேள்விகளுள் சில .

௧. தர்மபுரியில் தமிழன் தான் தமிழனை அடித்தான் , இப்போது உங்கள் தமிழ்த் தேசியம் எங்கே போனது ?

௨. தமிழ்த் தேசிய குடியரசு தான் தீர்வு என்கிறீர்களே அப்போது எதற்கு இந்தியக் கடவுச் சீட்டை வைத்திருக்கிறீர்கள் ?

௩. ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழர்களை மலையாளிகள் அடிக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே, தமிழ்த் தேசிய இனமாக நாம் இருந்தால் நாம் இவ்வாறு தாக்கப்பட மாட்டோம் என்கிறீர்களே , உங்களை யார்  ஐயப்பன் கோவிலுக்கு போகச் சொன்னது ? உங்களை நாங்கள் எந்தக் கோவிலுக்கும் போக வேண்டாம் என்று தானே சொல்கிறோம் !!?

௪. தமிழன் என்று சொன்னால் பிராமணன் உள்ளே வந்து விடுவான் , திராவிடன் என்று சொன்னால் பிராமணன் உள்ளே வர மாட்டான் என்று நாங்கள் சொல்கிறோம் , ஆனால் தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு நீங்கள் ஏன் உங்கள் இயக்கத்தில் பிராமணர்களுக்கு இடம் கொடுத்துள்ளீர் ?

இவ்வாறு பல அபத்தமான காலாவதியான கேள்விகளுக்கு மணியரசன் ஐயா தக்க பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்த் தேசிய அறிவாசான் மணியரசன் ஐயாவிற்கு தமிழர்கள் சார்பில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். திராவிட அமைப்புகளில் உள்ள தமிழர்களும் பெரியாரை தலையில் தூக்கி சுமக்கும் தமிழர்களும் தயவு செய்து இந்த விவாதத்தை கேட்டு முழுத் தமிழர்களாக மனமாற்றம் பெற்று வரவேண்டும் என விழைகிறோம் .






[vuukle-powerbar-top]

Recent Post