Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியா முழுவதும் ஒரே சீரான போக்குவரத்து ஊர்தி எண் பலகை கொண்டு வர வேண்டும் என்பதே இந்திய அரசின் எண்ணம். அதன் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப் பட்டதே IND எண் பலகை. இப்பலகை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தும் முன்னரே பலரும் IND எண் பலகைக்கு மாறிவிட்டனர். மேலும் ஊர்தி ஓட்டுனர், ஊர்தி குறித்த தகவல் அனைத்தும் உள்ள குறியீடும் இப்பலகையில் பொருத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. அவ்வாறன தகவல் குறியீடு பொருத்தும் நடைமுறை தமிழகத்தில் வரவுமில்லை, தமிழக அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவும் இல்லை. இருப்பினும் சில இந்திய தேசப் பக்தர்கள் IND எண் பலகைக்கு அவசரமாக மாறியுள்ளார். பல மாதங்கள் கழித்து விழித்துக் கொண்ட தமிழக காவல்துறை இப்போது தான் இந்த பலகை தேவையில்லை என்று மக்களுக்கு கூறி வருகிறது.

இதில் சில அடிப்படை கேள்விகள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்த மாநிலம் சார்ந்த எண் பலகை உள்ளது. தமிழகத்திற்கு TN என்ற அடையாளம் உள்ளது. ஆந்திராவிற்கு AP என்ற அடையாளம் உள்ளது. பின்பு எதற்கு தனியாக IND என்ற அடையாளம் தேவைப்படுகிறது ? இந்தியாவை கடந்து எந்த வாகனமும் வெளியே செல்லப் போவதில்லை. பிறகு எதற்கு தனியாக IND அடையாளம் . இது திட்டமிட்ட இந்திய அடையாளத் திணிப்பு அல்லவா ? போக்குவரத்து துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அதை நடுவண் அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிக்கு தமிழக அரசும் மக்களும் கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள மாநில அடையாளத்தை அழித்து இந்திய தேசிய அடையாளத்தை வாகனங்களில் புகுத்துவதை நாம் ஏற்க முடியாது. இந்தியா முழுவதும் உள்ள மாநில அடையாளத்தை எடுத்து விட்டு IND என்ற இந்தி தேசிய அடையாளத்தை புகுத்தும் நடவடிக்கையை நடுவண் அரசு கைவிட வேண்டும். IND எண் பலகை தமிழகத்திற்கு தேவையில்லை.




[vuukle-powerbar-top]

Recent Post