Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மிக அவசரமாக நிலம் கையகப்படுத்தும்  சட்டத்தை கொண்டு வருகிறது பாஜக அரசு. அதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தாலும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும் முனைப்பை காட்டுகிறது பாஜக அரசு.

இந்நிலையில் தான் பெருநிறுவன ஊடக பலத்தை கொண்ட அன்னா அசாரே , அரவிந்த் கேஜ்ரிவால் போன்றவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். ஆந்திராவிலும், ஓடிசாவிலும் இந்த சட்டத்தை எதிர்த்து பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. வடமாநிலங்களில் உள்ள விவசாயிகள் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். தமிழகத்தில் உள்ள கட்சிகள் பலவும் இந்த சட்டத்தை எதிர்க்கின்றன. இருப்பினும் தமிழகத்தில் உள்ளவர்கள் டெல்லி வரை சென்று போராட இயலாது. நமக்கான அரசு என்று ஒன்று இருந்தால் நமது சிக்கல்களை, எதிர்ப்பை இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். நமக்கான குரலாக அது ஒலிக்க வேண்டும் . ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை . ஆளும் திராவிடக் கட்சியும், ஆண்ட திராவிடக் கட்சியும் தமிழர் நலனுக்கு எதிரான கட்சிகளே என்பது நமக்கெல்லாம் பெரும் பின்னடைவு . இக்கட்சிகளால் தமிழகம் இழந்த உரிமைகள் கொஞ்ச நஞ்சமல்ல . எல்லா உரிமைகளும் பறிபோவதற்கு முன்பாக தமிழர்கள் இந்திய தேசிய,  திராவிட கட்சிகளை புறக்கணித்து தமிழர் நலன் சார்ந்த கட்சிகளை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

நில அபகரிப்பு சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப் படுத்த முடியாது என்பதை தமிழக அரசு திட்டவட்டமாக பதிலளிக்க வேண்டும். இவ்வாறு செய்யாது போனால் தமிழர்கள் எஞ்சி இருக்கும் கொஞ்சம் நிலத்தையும் உறுதியாக இழப்பார்கள். நாம் அனைவரும் ஓரணியில் நின்று மக்கள் விரோத சட்டங்களை முரியடிப்போம். மக்கள் விரோத கட்சிகளை வீழ்த்துவோம்.






[vuukle-powerbar-top]

Recent Post