Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத் தொலைகாட்சிகளில் தொடர்ந்து மறுக்கப்படும் தமிழர் உரிமைகள் !!

அண்மையில் நடந்து முடிந்த விஜய் தொலைக்காட்சி பாட்டுப்போட்டியில் தமிழர் அல்லாதவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இது குறித்து தமிழர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்துள்ளதை பார்க்க முடிந்தது. இறுதி சுற்றுவரை தேர்வு செய்யப்பட்ட பத்து பாடகர்களில் ஏழு பேர் தமிழர் அல்லாதவர்கள் என்பது வேதனையான செய்தி. மூன்று பேர் மட்டும் தான் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள். அந்த மூன்றில் ஒருவருக்கும் முதல் பரிசு கொடுக்கப்படவில்லை என்பதும் வருத்தமான செய்தியே.

தமிழக அரசியலில், தமிழ்த் திரைப்படத் துறையில், தமிழக அரசு உயர் பதவிகளில், தமிழக விளையாட்டு துறையில் தமிழர் அல்லாதவர்கள் கொடிக்கட்டி பறக்கிறார்கள். தமிழர்கள் இத்துறைகளில் இரண்டாம் நிலையைத் தான் பெற முடிகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் நாட்டை தமிழரே ஆள்வோம் என்ற முழக்கம் வலுப்பெற்று வருகிறது. இது தமிழக ஆட்சியாளர்களை கதிகலங்கவும் செய்துள்ளது. தமிழர்கள் விழிப்புடன் தங்களது உரிமைகள் குறித்து பேசத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் முன்னுரிமை வேண்டும் என்ற குரலும் இப்போது ஓங்கி ஒலித்து வருவதும் நன்மை பயக்கக் கூடியதாகும். எல்லா தளங்களிலும் இது போன்ற உரிமைக்குரல் இனி ஒலிக்க வேண்டும்.

இந்நிலையில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை விஜய் தொலைக்காட்சி வெளிமாநில மக்களுக்கு கொடுப்பதும் தமிழர் உரிமைகள் மறுக்கப்படுவதாகவே அமைகிறது. தமிழகத்திற்கான குரல் தேடல் என்று தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத வெளிமாநில மக்களுக்கு கொடுப்பதை இனியும் நாம் வேடிக்கை பார்க்க இயலாது . நமது எதிர்ப்பை விஜய் தொலைக்காட்சிக்கு பதிவு செய்வதும் அவசியமாகும். போட்டிகள் தமிழர்களிடையே நடப்பட வேண்டும் என்றும் பரிசுகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நாம் வலுப்படுத்துவோம். தமிழர்கள் உரிமைகள் மறுக்கப்படும் அனைத்து தளங்களிலும் நம் எதிர்ப்பை பதிவை செய்வதின் மூலமாகவே தமிழர்கள் நாம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.









[vuukle-powerbar-top]

Recent Post