Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐநா அறிக்கையை உடனே வெளியிடு ! தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு யாழில் நடைபெற்ற மாபெரும் மாணவர் பேரணி !!

தமிழினப் படுகொலையில் இலங்கை அரசின் மீதான ஐ,நா வின் அறிக்கை வரும் மார்ச் மாதத்திலேயே வெளியிட வேண்டும் என்ற யாழ் பல்கலையில் மாணவர்கள் மாபெரும் பேரணி இப்போது நடத்துகிறார்கள். இந்தியாவும் இலங்கையும் சர்வதேச நாடுகளும் இலங்கை மீதான போர்குற்ற அறிக்கையை இன்னும் தாமதப் படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றன. இதன் மூலம் இலங்கையை தப்பிக்க வைக்கும் முயற்சியும் நடக்கின்றன. ஏற்கனவே தமிழகத் அரசியல் கட்சிகளும் , இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்  நலன் சார்ந்த கட்சிகளும் அறிக்கையை மார்ச் மாதத்தில் ஐ.நா வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளன. காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானதாகும்.

இந்நிலையில் யாழ் பல்கலை மாணவர்கள் ஆண்களும் பெண்களும் இணைந்து இப்போது ஐநா அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று தங்கள் கோரிக்கையை மனுவை கொடுக்க உள்ளனர். மாணவர்களுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து இப்பேரணியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.  இப்படியான பேரணிகள் தான் உண்மையில் உலக அரசுகளின் கவனத்தை தமிழர்கள் பக்கம் திருப்பும் நடவடிக்கையாகும். ஜனநாயக ரீதியான இவ்வகையான தொடர் நடவடிக்கைகள் என்றாவது ஒன்று நாள் நிச்சயம் தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் என்பதில் ஐயமில்லை . மேலும் தமிழக அரசும் ஈழத் தமிழர்கள் பக்கம் நின்று ஐயா அறிக்கை குறித்த தனது நிலைபாட்டை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே தமிழகத் தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது. உலகத் தமிழர்களின் போராட்டம் வெல்லட்டும் . 
[vuukle-powerbar-top]

Recent Post