Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அன்பார்ந்த தமிழ்த் தேசிய தோழர்கள், அமைப்புகள், கட்சிகளிடம் ஒரு வேண்டுகோள் !!

அன்பார்ந்த உறவுகளே ! தமிழகம் இப்போது மிகப்பெரிய சோதனை காலத்தில் சிக்கித் தவிக்கிறது. தமிழர் மண்ணும், இனமும், மொழியும் அழிவின் விளிம்பில் உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி  செய்து வரும் திராவிடக் கட்சிகளும் , இந்தியாவை ஆட்சி செய்து வரும் ஆரியக் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.

இப்படியான நிலையில் தான் நாம் மண் மீட்கும், மொழி மீட்கும், இனம் மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு வருகிறோம் . இத்தோடு மட்டுமல்லாமல் தமிழீழத்திற்கான போராட்டமும் நாம் முன்னெடுத்து வருகிறோம். ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மேற்கூறிய போராட்டங்கள் அனைத்திலும் திராவிடர்கள், திராவிட இயக்கங்கள், திராவிட கட்சிகள் , திராவிட இளையோர் அணிகள் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் இருப்பை தக்கவைத்து வருகின்றனர். திராவிடர்களால் முன்னெடுக்கப்படும்  போராட்டங்கள் மூலமாக முடிவில் திராவிடர்களையே பதவியில் இருக்க வைக்க உதவும். அவர்களே தமிழகத்தின் முதன்மை சக்தியாகவும் நிலைநிறுத்தும். அதனால் தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழர்களுக்கு என்ற எந்த வலிமையான தமிழ்த் தேசியக் கட்சிகளும் இல்லாத நிலை உருவாகி உள்ளது . அப்படியே உருவானாலும் அக்கட்சிகள் யாவும் சாதிக் கட்சியாக சுருக்கப்பட்டுள்ளது.

இப்படியே போனால் தமிழர் தரப்பில் இருந்து ஒரு தலைமை தமிழகத்தில் தோன்ற வாய்ப்பில்லாமல் போகும் நிலை உருவாகும் . இதை எல்லாம் நாம் தவிர்த்து தமிழ் நாட்டை தமிழரே ஆளும் நிலை உருவாகவும் , தமிழர் சிக்கல்களை  தமிழர்களே தீர்க்கும் நிலை உருவாகவும் தமிழ்த் தேசிய அமைப்புகள், கட்சிகள் இன்னும் வீரியமுடன் மண் காக்கும், இனம் காக்கும், மொழி காக்கும் போராட்டங்களின் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபடும் போது நமது எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் திராவிட அமைப்புகளுடன் கூட்டு சேராமல் நாம் போராட வேண்டும். அதாவது பெரியாரை தலையில் தூக்கி சுமக்கும் அமைப்புகள் அல்லது திராவிடம் என்ற பெயரை சுமக்கும் அமைப்புகள் (இரண்டும் ஒன்று தான் ) இவைகளோடு நாம் சேராமல் நமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் . அப்போது தான் தமிழ்த் தேசிய அரசியல் தனித்துவமான அரசியல் சக்தியாக வளரும். இல்லையெனில் திராவிடம் வளரும் தமிழ்த் தேசியம் மீண்டும் ஏமாற்றப்படும். இதை கருத்தில் கொண்டு சிறியதோ அல்லது பெரியதோ, நமது போராட்டங்களை நாமே முன்னெடுப்போம் . தமிழ்த் தேசியத்தை அடுத்த தலைமுறைக்கு சிறப்பாக எடுத்துச் செல்வோம் . #தமிழ்வாழ்க

[vuukle-powerbar-top]

Recent Post