Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கோவில் மாணவர்கள் முன்னெடுத்த மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்  தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை தெளிவாக காட்டுகிறது !!

மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தில் தஞ்சை பகுதி உழவர்கள் தான் பெருமளவில் போராட்டம் நடந்தி வந்தனர். ஆனால் இது உழவர்கள் போராட்டம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் வாழ்வாதார போராட்டம் என்பதை மாணவர்கள் உணர்ந்து கொண்டதற்கு சான்று தான் கோவையின் அனைத்துக் கல்லூரி மாணவர்களின் சார்பில் நடைபெற்ற மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்.

உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டியை காட்டி இந்திய தேசிய பற்றை மக்களிடம் விதைத்து தமிழ்த் தேசத்தை நசுக்கிவிடலாம் என்று கனவு கண்ட இந்திய திராவிட அரசுகுகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளனர் மாணவர்கள். "தமிழ்நாட்டின் இறையாண்மை உரிமைக்காக  போராடுவோம்"  போன்ற வாசகமே மாணவர்களின் தமிழ்த் தேசிய உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. 'இந்திய அரசே தமிழகத்தை வஞ்சிக்காதே' என்ற செய்தியும் இந்திய தேசியத்திற்கு விழும் பேரடியாகும்.

நாமெல்லாம் தமிழர்கள் இந்தியம் நம்மை தொடர்ந்து வஞ்சிக்கிறது என்பதை தமிழ்ப் பிள்ளைகள் இப்போது தெரிந்து கொண்டு விட்டனர் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது . இவர்களின் போராட்டத்தால்  தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையும் பிறக்கிறது . இந்திய கொடியை காட்டி இனியும் தமிழ் மாணவர்களை ஏமாற்ற முடியாது என்பதை நம் மாணவர்கள் நிரூபித்து விட்டனர். மாணவர்களின் இத்தகைய போராட்டத்திற்கு நம் மனப்பூர்வமான வாழ்த்துகளையும் ஆதரவையும் தருவோம். மீத்தேன் திட்டத்தை உறுதியாக தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம். #தமிழ்வாழ்க


படங்கள் : மீத்தேன் திட்டத்திற்கெதிரான மாணவர் இயக்கம் கோவை
[vuukle-powerbar-top]

Recent Post