Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்களின் விலைமதிப்பற்ற பண்பாட்டுக் கலைகளை மீட்க முடியுமா ? 

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நலிந்து வரும் தமிழர் பண்பாட்டுக் கலைஞர்களை குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கரகாட்ட கலைஞர்கள், புலியாட்ட கலைஞர்கள், கூத்து கலைஞர்கள், பண்பாட்டு இசைக் கலைஞர்கள் என பலரையும் பேச வைத்தனர். இந்நிகழ்வில் பேசிய கலைஞர்கள் தங்கள் கலைகளுக்கு அரசு எந்தவிதமான ஊக்குவிப்பும் கொடுப்பதில்லை என்றும் வறுமையில் தங்கள் வாழ்க்கையை கழித்து வருவதாக கூறினர்.

பல ஆயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய சிறப்புமிக்க கலைகளை இன்றும் சிலர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளித்தாலும் , இக்கலைகள் யாவும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுமா என்பது கேள்விக்குறி . கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம்,  பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், பொம்மலாட்டம் , குறவர் கூத்து , தவில், மத்தளம், உறுமி போன்ற இசைக்கலைகள், வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல் என பல கலைகள் அடுத்த தலைமுறைக்கும் சென்றால் மட்டுமே தமிழ்த் தேசிய அடையாளங்களை நாம் தக்க வைக்க இயலும். ஏற்கனவே சல்லிக்கட்டை இந்திய அரசு தடை செய்த நிலையில் தமிழர்கள் நாம் மீதமுள்ள தமிழ்த் தேசிய கலைகளை காப்பாற்ற எல்லா முயற்சிகளை எடுக்க வேண்டும். 

நாம் என்ன செய்யலாம் ? நம்முடைய திருமண நிகழ்ச்சிகள், புதுமனை புகுவிழா, பிறந்த நாள் விழா மற்றும் இல்லத்தில் நடைபெறும் எந்த சிறப்பு விழாக்களிலும் தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலைகளை நடத்த வேண்டும். அலுவலகம் சார்ந்த பண்பாட்டு நிகழ்வுகளிலும் நாம் இக்கலைகளை ஊக்குவிக்கலாம்.  இக்கலைஞர்களை நம்முடைய இடத்திற்கு அழைத்து வந்து மரியாதை செய்ய வேண்டும். இவர்களுக்கு தக்க ஊக்கத் தொகையும் கொடுக்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு இக்கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். புதிய பாரம்பரிய கலைப்பயிற்சி கூடங்களையும் பனம்பலம் கொண்டவர்கள் தொடங்க வேண்டும். வணிக ரீதியாகவும் தமிழர் கலைகள் வெற்றி அடைய வைக்க வேண்டும். தமிழர் கலைகளையும் கலைஞர்களையும் வாழ வைக்க வேண்டிய கடமை தமிழ்ப் பிள்ளைகளான நமக்கு நிச்சயம் உள்ளது என்பதை நினைவில் கொள்வோம். நமது கலைகளை மீட்போம் ! 





 


[vuukle-powerbar-top]

Recent Post