Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒரே நாளில் இந்தித் திணிப்பு அகற்றம் !!

தாராபுரத்தில் தமிழக அரசின் கீழ் செயல்படும் நகராட்சி நிர்வாகம் இந்தி மொழியில் சுவர் விளம்பரம் செய்ததை பழ.சிவக்குமார் என்பவர் படம் பிடித்து முகநூலில் பதிவு செய்திருந்தார் . அதை அடுத்து இந்த விளம்பரத்திற்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கடும் கண்டனமும் தெரிவித்தது. தமிழ் ஆர்வலர்கள் இத்தகைய இந்தித் திணிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முகநூல் வாயிலாக வைக்கப்பட்டது.

செய்தியை அறிந்த தந்தை பெரியார் திராவிடக் கழகம் இந்த விளம்பரத்தில் உள்ள இந்தித் திணிப்பை அகற்ற வேண்டும் என்று தாராபுரம் நகராட்சிக்கு கடிதம் அனுப்பியது.  இதை கண்டித்து நேற்று 25-2-2015 தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நாளை 27-2-2015 இந்தி அழிப்பு போராட்டத்தை அறிவித்திருந்தது இதனை அடுத்து ஒரே நாளில் தாராபுரம் நகராட்சி அந்த சுவர் விளம்பத்தை அழித்தது. அதனால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. 
[vuukle-powerbar-top]

Recent Post