Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி !

முதல் முறையாக ஒரு தமிழர் கட்சி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றியோ தோல்வியோ தமிழ்த் தேசிய மக்களுக்கான வாக்கு வங்கி தமிழகத்தில் உள்ளதா என்று இம்முறை சோதித்து பார்த்து விட வேண்டியது தான் என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழர்களை சாதியாக பிரித்து தமிழர்கள் ஒற்றுமை அடைய முடியாதவாறு செய்த திராவிடக் கட்சிகள் தமிழர்கள் இப்போது இனமாக கட்டமைக்கப்பட்டு வருவதை கண்டு அச்சம் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் . தமிழர் கட்சிகள் என்றால் சாதிக் கட்சியாகவும் , திராவிடக் கட்சி என்றால் அது சாதியில்லாத கட்சியாகவும் ஒரு பொய்ப்பிம்பத்தை திராவிடர்கள் இத்தனை ஆண்டுகள் உருவாக்கி வந்துள்ளது இனி முடிவுக்கு வரும் நாள் வந்துவிட்டது. ஒட்டுமொத்த இனத்திற்கான கட்சியாக நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழர் தலைமை ஏற்று நடத்தும் கட்சிகளும் தேர்தலில் பலத்த போட்டியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை . பாமக ஏற்கனவே முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. விசிக தன்னுடைய நிலைப்பாடு என்ன என்று தெரிவிக்கவில்லை. தமிழக வாழ்வுரிமை கட்சியும் தனித்து நிற்குமா அல்லது திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்குமா எனத் தெரியவில்லை. புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் திராவிட  கட்சிகளுடன் கூட்டு சேராமல் போட்டிடுமா எனத் தெரியவில்லை.   மேலும் பழ. நெடுமாறன் ஐயாவின் தமிழர் தேசிய முன்னணி மற்றும் இன்னபிற தமிழ்த் தேசிய கட்சிகளும் தேர்தலில் தங்களால் இயன்ற அளவில்  போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது.  தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சில தொகுதிகளில் வேட்பாளர்களை முன்னிறுத்தும் வாய்ப்பு உள்ளது.  எப்படியாயினும் வரும் தேர்தலில் முதல் முறையாக பல தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசியத்தை முன்வைத்து களமிறங்கப் போவது உறுதியாகி உள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே தமிழகத்தில் ஆளும் கட்சிகளும் எதிர்க் கட்சிகளும் தமிழின நலன் சார்ந்த கட்சிகளாகவே இருக்கும் நாளில் தான் தமிழர்களுக்கு முழு வெற்றி கிடைக்கும். அந்த நாளை எதிர்நோக்கி தமிழர்கள் நாம் பயணிப்போம். 





[vuukle-powerbar-top]

Recent Post