Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தமிழக ஆம் ஆத்மி கட்சி தொடக்கம் !!

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்  பண்பாட்டு அமைப்பான வீரத்தமிழர் முன்னணிக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழர் மதங்கள் முழுவதும் தமிழர்களின் கையை விட்டு நழுவும் முன்பு அதை மீட்பது தமிழர்களின் கடமையாகும். நூறு ஆண்டுகால திராவிடக்  கொள்கை ஆதிக்கத்தில் தமிழர் பண்பாடுகள் முற்றிலும் ஆரியர்களின் கைக்கு போனது. தமிழர் கோவில்கள், பண்பாட்டு அடையாளங்கள், தமிழர் கடவுளர்கள், வழிபாடுகள் என அனைத்தும் ஆரியத்திற்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. தமிழர்களுக்கு மெய்யியல் என்று ஒன்று இல்லை கூறிய திராவிடம் தமிழர் மரபுசார் மெய்யியல் கோட்பாடுகளை ஆரியம் அபகரிக்க காரணமாக இருந்தது. இதனால் பண்பாட்டு ரீதியாக தமிழர்கள் இழந்தது கொஞ்சமல்ல. மறைமலை அடிகளார் , தேவநேய பாவாணர் போன்றோர் தமிழர் மதத்தை ஆரியத்திடம் இருந்து மீட்க  பெரு முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் திராவிடத்தின் ஆதிக்கத்தால் தமிழர் மதத்தை மீட்க முடியவில்லை. அதனால் தமிழர் பண்பாட்டின் சிறப்பியல்புகளை ஆரியம் தனதாக்கிக் கொண்டது. இப்போது தமிழர் பண்பாட்டை, இன அடையாளத்தை , மெய்யியல் கோட்பாடுகளை, வழிபாட்டு உரிமைகளை மீட்க வேண்டிய சூழ்நிலையில் வீரத் தமிழர் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  திராவிடத்தின் தாக்கத்தில் இருந்தும் ஆரியத்தின் பிடியில் இருந்தும் தமிழர்களை வீரத் தமிழர் முன்னணி மீட்க வேண்டும் என்பதே நமது விருப்பமாக உள்ளது. வீரம் செறிந்த தமிழ்ச் சான்றோர்கள் வழிகாட்டிய பண்பாட்டு புரட்சியை வீரத் தமிழர் முன்னணி முன்னெடுக்க நம் வாழ்த்துகள். விரைவில் தமிழர் மதம் தமிழர் வசமாகட்டும்.




[vuukle-powerbar-top]

Recent Post