Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியா’ என்பது தான் என் அரசாங்கத்தின் ஒரே மதம். அரசியலமைப்புச் சட்டம்தான் என் புனித நூல் - பிரதமர் மோடி !

இது எப்படியான அப்பட்டமான பொய் என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். இந்தியா என்ற நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள் வாழ்ந்தாலும் அனைவர் மீதும் இந்தியை, சமஸ்கிருத மொழியை ஒவ்வொரு நாளும் திணித்து வருவது தான் பாஜக அரசின் கொள்கையாக உள்ளது . இந்தியா என்பது அனைவருக்குமான நாடு அல்ல , அது இந்தி தேசிய இன மக்களுக்கான நாடு . அந்த நாட்டில் இந்திய அரசியல் சாசனம் என்பது ஏழைகளுக்கும், பழங்குடி மக்களுக்கும், மொழியால் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. மக்களுக்கு எதிரான ஒரு பக்க சார்பான அரசியல் சாசனத்தை இந்திய மக்கள் அனைவரும் எதிர்க்க வேண்டிய நிலையில் , மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் இந்திய அரசியல் சாசனத்தை புனித நூல் என்று சொல்வது மாபெரும் ஏமாற்று வேலையாகும். அநீதியான புனித நூல் மக்களுக்கு தேவையில்லை. இந்தியாவில் தேசிய இன மக்களால்  உருவாக்கப்படும் அரசியல் சாசனமே மக்கள் அதிகாரத்திற்கான நூலாக இருக்க முடியும். மாநிலங்கள் அனைத்தும் தன்னாட்சி பெரும் போது தான் இந்தியா என்பது உண்மையான கூட்டாச்சி நாடாக விளங்க முடியும் . அதுவரை தேசிய இனங்களை  ஏய்த்துப் பிழைப்க்கும் இந்தியர்களுக்கு  தான் இந்தியா என்பது மதமாகவும் அரசியல் சாசனம்  என்பது புனித நூலாகவும் இருக்க முடியும். 
[vuukle-powerbar-top]

Recent Post