Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலகத் தாய் மொழி நாளில் அனைத்து நடுவண் அரசு பள்ளிகளிலும் தாய் மொழி விழா அறிவிப்பு !

நாளை வரவிருக்கும் உலகத் தாய் மொழி நாளில் முதல் முறையாக இந்திய அரசு தாய்மொழி விழாவை அனைத்து நடுவண் அரசுப் பள்ளிகளிலும் அனுசரிக்க உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. எல்லா மாநிலங்களிலும் உள்ள நடுவண் அரசுப் பள்ளிகளிலும் அந்தந்த மாநில மொழியில் கட்டுரை போட்டிகள் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது இந்திய அரசு. தாய் மொழியை அனைவரும் ஒரு நாளாவது பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. 

உண்மையில் இந்தியாவில் உள்ள அனைத்து தாய் மொழிகளையும் அழித்தது யார் எனக் கேட்டால் அது இந்திய அரசு தான் . இதை எளிதில் மறந்து விட்டு தாய் மொழி நாளை இந்திய அரசு அனுசரிக்கச் சொல்வது எவ்வளவு பெரிய கயமை. ஒவ்வொரு மாநிலத்திலும் தாய் மொழிக் கல்வியை சட்டமாக்கி இருந்தால், இந்தியை பிற மாநிலங்கள் மீது திணிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்தியவெங்கும் தாய் மொழிகள் சிறந்து விளங்கி இருக்கும். இந்தியாவில் உள்ள இந்தி அல்லாத அனைத்து மாநிலங்களிலும் தாய் மொழி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே அலுவல் மொழி தகுதியை தக்கவைத்துக்கொண்டு சீரும் சிறப்புமாக விளங்குகிறது . 

உண்மையில் இந்திய அரசுக்கு தாய் மொழிகள் மீது அக்கறை இருக்குமே எனில் உடனடியாக அனைத்து மாநில மொழிகளுக்கும் இந்திக்கு கொடுக்கப்பட்டுள்ளது ஆட்சி மொழி அதிகாரத்தை கொடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் தாய் மொழி கட்டாய கல்வி மொழியாக்கப்பட வேண்டும். அருகாமைப் பள்ளி, இலவசக் கல்வி, தாய் மொழிக் கல்வி என்ற மக்களின் உரிமையை மீட்டெடுக்கும் நாளில் நமது தாய் மொழியும் தாய் மண்ணும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.  இதற்காக வரும் தாய் மொழி நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் . 






[vuukle-powerbar-top]

Recent Post