Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்து ஆன்மீக கண்காட்சி என்ற பெயரில் நடக்கும் ஏமாற்று வேலை !!

சென்னையில் இந்து ஆன்மீக கண்காட்சி என்ற பெயரில் மாணவர்களை வரவழைத்து அவர்களிடம் தவறான கருத்தியலை புகுத்துகின்றனர் ஆரிய இந்துத்வா அமைப்பினர். தமிழர் மதத்திற்கும் பண்பாட்டிற்கும் ஒவ்வாத பல நிகழ்வுகள் இக்கண்காட்சியில் மாணவர்களிடையே புகுத்தப்படுகிறது.

ஆசிரியரை வணங்குதல் என்ற பெயரில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூசை செய்வது, பெரியோர்களை வணங்குதல் என்ற பெயரில் சிறார்கள் பெரியவர்களுக்கு பாத பூசை செய்தல், சிறுமிகளை வழங்குதல் என்ற பெயரில் இளைஞர்கள் சிறுமியர்களுக்கு பாத பூசை செய்தல், பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பிற ருத்திராட்ச மாலை அணிவிப்பு போன்ற பல தேவையற்ற சடங்குகளை மாணவர்களுக்கு புகுத்தி வருகின்றனர் ஆரிய இந்துத்வா அமைப்பினர்.

கன்யா வந்தனம், கங்கா வந்தனம், பூமி வந்தனம் போன்ற ஆரியப் பண்பாடுகளை தமிழ்ப் பிள்ளைகளின் மேல் புகுத்துவதை நாம் ஏற்க இயலாது. தமிழர் பண்பாட்டில் , வள்ளுவர் வகுத்த நெறியில் பெரியோரை மதித்தல் , ஆசிரியர்களை மதித்தல், சுற்றுப்புற சூழலை மதித்தல், உழவர்களை மதித்தல், நீரை மதித்தல் போன்ற நல்லொழுக்கங்கள் இயல்பாகவே அமைந்துள்ளன. திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், சித்தர் நூல்கள் யாவும் சிறப்பான சமூகம் வளர உறுதுணையாக நிற்கின்றன. தமிழர் மெய்யியல் நூல்களான திருமுறைகளும், திரு அருட்பாவும் மாணவர்களுக்கு இறை நெறியை போதிக்கின்றன. இவற்றை பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு வீட்டில் போதித்தாலே போதுமானது. இதை அறிவுறுத்துவதை விட்டு செயற்கையான பாதபூசை, கன்யா வந்தனம் , பூமி வந்தனம், ருத்திராட்ச மாலை அணிவிப்பு போன்றவைகளை மாணவர்களிடம் புகுத்துவது தமிழர் மரபுசார் அறிவை மழுங்கச் செய்யும் நடவடிக்கையே ஆகும். அறிவிக்கும் தமிழர் இயல் பண்பாட்டிற்கு எதிராகவே இச்செயல்கள் அமைகின்றன. தமிழ்ப் பெற்றோர்கள் இத்தகைய தேவையற்ற ஆரிய மத சடங்குகளை புறந்தள்ளி தமிழர் பண்பாட்டிற்கு ஒத்த ஒழுக்கங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆரிய இந்து மதம், கிருத்துவம், இசுலாம் போன்ற எந்த மதமாக இருந்தாலும்  குழுந்தைகளிடம் தேவையற்ற, அறிவை மழுங்கச் செய்கின்ற சடங்குளை புகுத்துவதை அந்தந்த மதம் சார்ந்தவர்கள் கண்டிக்க முன்வர வேண்டும். தமிழர்கள் இயல்பான தமிழர் மதம் சார்ந்த பண்பாட்டையும், ஒழுக்கங்களையும் பின்பற்றினாலே போதுமானது. பொய்யான ஆரிய மதச் சடங்குளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதை தமிழ்ச் சான்றோர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.



[vuukle-powerbar-top]

Recent Post