Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடர்வண்டி நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் கூறிவரும் நிலையில் தொடர்வண்டித் துறை இன்னும் நடுவண் அரசின் கீழ் தான் இயங்கவேண்டுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழகத்திற்கு புதிய தொடர்வண்டிகள் அறிவிக்கப்படவில்லை . ஏற்கனவே அறிவித்த திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள தொடர்வண்டித் துறையில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு பகிரங்கமாக மறுக்கப்படுகிறது. மலையாளிகளும் வடவர்களும் அதிக அளவில் தமிழகத்தில் திட்டமிட்டு நடுவண் அரசால் வேலைக்கு அமர்தப்படுகிறார்கள். தமிழகத்தில் ஓடும் தொடர்வண்டிகளில் பாதுகாப்பு அறிவிப்பு, பயணிகள் பெயர் பட்டியல் என அனைத்தும் இந்தி மொழியில் தான் தொடர்வண்டித் துறை வழங்கி வருகிறது . பயணச் சீட்டு கூட தமிழில் இல்லை.  தொடர்வண்டி முன்பதிவு இணையதளம் ஆங்கிலத்திலும் இந்தியில் மட்டுமே உள்ளன. ஆர்.ஆர்.பி வினாத் தாள்கள் கூட இந்தி மக்களுக்கு சாதகமாக உள்ளது.  இப்படி இந்தி மக்களுக்கு சார்பாகவே தொடர்வண்டித் கடந்த 65 ஆண்டுகளாக  இயங்கி வருகிறது. இந்த அநீதிக்கு இதுவரை ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் படவில்லை.

தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் நிதி நிலை அறிக்கை குறித்து கவலைப்படும் வேளையில் தொடர்வண்டித் துறை மாநில அரசுகளின் கட்டுபாட்டில் முழுமையாக வரவேண்டும் என்ற கோரிக்கை எழுப்ப வேண்டும். சாலை போக்குவரத்து எவ்வாறு மாநிலங்களில் கீழ் இயங்குகிறதோ அவ்வாறே தொடர்வண்டித் துறையும் இயங்க வேண்டும் . நடுவண் அரசை மாநில அரசுகள் எதிர்பார்க்கும் நிலை இருக்கக் கூடாது . தங்களுக்கு தேவையான தொடர்வண்டிகள், பாதைகளை மாநில அரசுகளே அமைக்கும் தன்னாட்சி உரிமையை மாநில அரசுகள் கோர வேண்டும். நடுவண் அரசின் அதிகாரத்தை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். வரும் காலத்திலாவது தொடர்வண்டி உட்பட பல துறைகளை மாநில அரசின் கீழ் கொண்டு வர முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். 
[vuukle-powerbar-top]

Recent Post