Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தோழர் தியாகு வீடு திரும்ப வேண்டும். கவிஞர் தாமரை போராட்டம். மிகவும் கவலையளிக்கும் செய்தியாக உள்ளது !!

தமிழ்த் தேசியக் களத்தில் பல போராட்டங்களில் பங்கெடுத்தவர் தோழர் தியாகு. அவரது கடந்த கால வாழ்க்கை பல சோதனைகளை கொண்டதாகவே இருக்கிறது. தோழர் தியாகு நுட்பமான அரசியல் அறிவை கொண்டவர். தொலைக்காட்சி விவாதங்களில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக திறம்பட விவாதிக்கும் வல்லமை பொருந்தியவர். விவாத நிகழ்சிகளில் தமிழினப் பகைவர்கள் தோழர் தியாகுவின் வாதங்களை கண்டு அதிர்ந்து போவார்கள். அப்படிப்பட்ட சிறப்பான அறிவர் தோழர் தியாகு.

இருப்பினும் தோழர் தியாகு அவர்களின் தனிப்பட்ட வாழ்கையில் சில குழப்பங்கள் இருப்பதாக செய்திகள் அவ்வப்போது வருகிறது. இம்முறை தோழரின் மனைவி கவிஞர் தாமரை தன்னுடைய கணவர் வீடு திரும்ப வேண்டி போராட்டம் அறிவித்துள்ளார். இந்த செய்தி தமிழ்த் தேசிய அரசியலில் பயணிக்கும் மக்களுக்கு ஒரு வருத்தமான செய்தியாகும். தாமரை அவர்களும் இப்போது பொதுவெளியில் வந்து நம்மிடம் நீதி கேட்கிறார். தனது கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோருகிறார். இது எந்தப் பெண்ணுக்கும் உரிய நியாயமான கோரிக்கை தான்.

இருப்பினும் தோழர் தியாகு அவர்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நமது வயதும் இல்லை , அறிவும் இல்லை என்ற வகையில் நாம் விரும்புவது எல்லாம் தோழர் தியாகு எப்படிப்பட்ட சொல்ல்நிலையில் இருந்தாலும் அவர் மீண்டும் தாமரையுடன் சேர்ந்து வாழ வேண்டும். அவர் எங்கிருந்தாலும் திரும்பி வந்து தாமரை அவர்களுடன் பேசி தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நாம் கோரிக்கை வைக்கிறோம். மீண்டும் தமிழ்த் தேசிய தளத்தில் தோழர் தியாகு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.





[vuukle-powerbar-top]

Recent Post