Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வீரத்தமிழர் முன்னணி வெல்லட்டும். தமிழர் வாழ்வு சிறக்கட்டும் !!

ஒரு இனத்தை கட்டமைக்க வேண்டுமெனில் மக்களின் மொழியும், பண்பாடும் மெய்யியலும் அரசியலுடன் இணைந்து வலுப்பட வேண்டும். அவ்வாறு வலுப்படும் போது பெரும்பான்மையான இன உணர்வு கொண்ட ஒரு தலைமுறை  உருவாகும்.  ஆரியத்தால் தமிழினம் தாழ்ந்தது. திராவிடத்தால் தமிழினம் வீழ்ந்தது. தமிழர் மதம் ஆரியர்களால் கைப்பற்றப் பட்டது.  திராவிடர்களால் சிதைக்கப்பட்டது. அதனால் தமிழினம் தனது அடையாளத்தை இழந்தது. பண்பாட்டை இழந்தது, மொழியை இழந்தது , அரசியலையும் இழந்தது. தமிழர் அல்லாதவர்கள் நாட்டை ஆளவும், தமிழர் அல்லாதவர்கள் தமிழர் வழிபாடுகளை கைப்பற்றவும் செய்தனர். வீட்டிலும் வெளியிலும் தமிழர்கள் தமிழர்களாக வாழ வழியில்லாமல் போனது. இன உணர்வு அற்ற சமூகம் உருவானது. இறுதியில் இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் தமிழர்கள் கையறு நிலையில் இருக்க திராவிட அரசியல்வாதிகள் தமிழர்களை நம்பவைத்து கழுத்தரறுத்தனர்.  

தமிழர் மதம் மதத்தை கைப்பற்றிய ஆரிய இந்து மதத்தினர் இந்து முன்னணி, இந்து சபா, இந்து மக்கள் கட்சி, பாரத இந்து  என்று பெயர் வைத்துக் கொண்டு இன எதிரிகளுக்கு சேவகம் செய்தனர் . ஆர். எஸ்.எஸ், விசுவ இந்து பரிசத் போன்ற ஆரிய மத அமைப்புகள் தமிழர் வழிபாட்டு தலங்களை தங்கள் வசமாக்கினர். இவர்களால் ஏமாற்றப்பட்ட தமிழர்கள் தங்களை ஆரிய இந்துக்கள் என நம்பி ஆரிய பண்பாட்டை தழுவினர். தமிழர்களுக்கான தனித்துவமான பண்பாட்டு நாளைடைவில் மறைந்து போனது. இப்படி நெருக்கடியான சூழிலில் தான் தமிழர் பண்பாடு சார்ந்த அமைப்புகள் தமிழகத்தில் உருவானது. தமிழர் வரலாறு மீட்கப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது . தமிழின் தொன்மையும் பெருமையும் மக்களிடையே சென்று சேர்க்கப்பட்டது.  இருப்பினும் தமிழர் மதத்தை மீட்க வலுவான அமைப்புகள் இன்னும் தேவைபடுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி உருவாக்கியுள்ள வீரத் தமிழர் முன்னணி தமிழர் பண்பாட்டையும், வழிபாட்டையும் மீட்டெடுக்கும் ஒரு அமைப்பாக தோன்றியுள்ளது தமிழ் இனத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக, ஆர். எஸ். எஸ்  போன்ற ஆரிய அடிமை கூட்டங்களில் உள்ள தமிழர்கள் தங்கள் தாய் நாட்டையும் தாய் மொழியையும் காக்க வீரத் தமிழர் முன்னணி போன்ற தமிழர் மத அமைப்புகளில் சேர வேண்டும். நமது பண்பாட்டை தமிழர் மட்டுமே காக்க முடியும். ஆரியர்கள், திராவிடர்கள்  நமது பண்பாட்டை காக்க முன்வர மாட்டார்கள் என்பதை தமிழர்கள் உணர வேண்டும். வீரத் தமிழர் முன்னணி தமிழகத்தில் உள்ள அத்துணை முருகன், அம்மன், சிவன், திருமால் கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டு தமிழ் மக்களை தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் இணைக்க வழிவகை செய்தல் வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் தமிழர் பண்பாட்டை தழுவி ஏற்க வழிவகை செய்தல் வேண்டும்.  எல்லா இடங்களிலும் இதற்கான விழிப்புணர்வை தமிழ் இயக்கங்கள் ஏற்படுத்த வேண்டும். வீரத் தமிழர் முன்னணி போன்ற பல தமிழர் பண்பாட்டு இயக்கங்கள் உருவானால் விரைவில் தமிழர் நாடு தமிழர் கைகளில் வந்து விடும் என்பதில் ஐயமில்லை. வெல்லட்டும் வீரத் தமிழர் முன்னணி !







[vuukle-powerbar-top]

Recent Post