Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முருகன்  தமிழ்க் கடவுளா ? சிவன் தமிழ்க் கடவுளா ? அம்மன்  தமிழ்க் கடவுளா ? பிள்ளையார் தமிழ்க் கடவுளா ? மாலும் அயனும் தமிழ்க் கடவுளர்களா ? தேவரும் மூவரும் ஐவரும் முத்தரும் சித்தரும் சத்தரும் தமிழர் மதத்தில் வருகிறார்களா ? வேத மதக் கடவுளர்கள் யார் ? தமிழர் மதக் கடவுளர்கள் யார் ? எந்த கடவுளர்களை வேத மதம் அபகரித்துள்ளன ? எந்த கடவுளர்களை தமிழர் மதம் வேத மதத்திற்கு  வழங்கியுள்ளன? தமிழர் வழிபாட்டில் புகுத்தப்பட்ட ஆரிய கடவுளர்கள் எவர் எவர்  ?

இவற்றையெல்லாம் தீர்மானிக்கும் உரிமை திராவிடர்களுக்கும் இல்லை ஆரியர்களுக்கும் இல்லை என்பதே பதில். தமிழர்களின் வழிபாட்டு உரிமைகள் , பண்பாட்டு உரிமைகள், மெய்யியல் கோட்பாடுகள் எவையென்று தமிழர்களே தீர்வு செய்வார்கள்.  தமிழர் வரலாற்று பண்பாட்டு ஆய்வாளர்கள் அறிவர்கள் மேற்கண்ட ஐயங்களை தெளிவுபடுத்தி தமிழர்களை வழிநடத்துவார்கள். ஆரிய திராவிட மதத்தை சார்ந்தவர்கள் உங்களது  மதங்களை பற்றி மட்டுமே சிந்தியுங்கள். தமிழர்கள்  அதில் தலையிட மாட்டார்கள். தேவையில்லாமல் தமிழர்களின் பண்பாட்டில் வரலாற்றில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். ஆரிய திராவிடர்களால் திரிக்கப்பட்ட சிதைக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றை, மொழியை பண்பாட்டை  எப்படி மீட்டெடுப்பது என்பது தமிழர்களுக்கு தெரியும். அதை தமிழர்கள் சிறப்பாகவே செய்து முடிப்பார்கள். இதைப் பற்றியான கவலை ஆரிய திராவிட மதத்தினருக்கு இனி தேவையில்லை.



[vuukle-powerbar-top]

Recent Post