Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


தமிழக அரசின் கீழ் நடக்கும் இந்தித் திணிப்பு !!

தாராபுரம் பேருந்து நிலையத்தில் இந்தியில் செய்தி எழுதியுள்ளார்கள் நகராட்சி நிர்வாகம். அதுவும் அனுமதி பெற்ற விளம்பரம் என்று எழுதியுள்ளனர் . யாருக்காக தமிழகத்தில் இந்தியில் எழுதுகிறார்கள் ? எதற்காக தமிழகத்தில் இந்தியை திணிக்க வேண்டும் ? இங்கு வாழும் மக்கள் தமிழர்கள் தானே ? அனைவருக்கும் தமிழில் செய்தி வழங்குவது தானே நகராட்சியின் கடமை? இதை செய்வதை விட்டு இந்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிப்பது போல தமிழக அரசின் கீழ் செயல்படும் தாராபுரம் நகராட்சி செய்வது எந்த வகையில் நியாயம்.  இப்படி பகிரங்கமாக இந்தியை திணித்த தாராபுரம் நகராட்சி ஆணையரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை வைக்கிறது . தாராபுரம் பகுதியில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இந்த செய்கையை உடனே கண்டிக்க வேண்டும், இந்தியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

படம்  உதவி : பழ. சிவகுமார்

[vuukle-powerbar-top]

Recent Post