Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாஜக  அமைச்சரின் மொழிவெறிப் பேச்சு கண்டிக்கத்தக்கது !!

இந்தியை கடுமையாக எதிர்த்த தமிழ் மண்ணிலேயே வந்து இந்தி மொழி தான் சிறந்தது என்று கூறுவது திட்டமிட்டு தமிழர்களை அவமானப் படுத்தும் நடவடிக்கையாகும். குறைந்த பட்சம் நாகரீகம் கூட இல்லாமல் தமிழகத்திற்கு வந்து தமிழ் மொழியின் பெருமையை பேசாமல் இந்திக்கு மகுடம் சூட்டுவது கீழ்த்தரமான செயல். அதுவும் உலக தாய் மொழி நாளன்று எல்லா மொழிகளுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற திட்டத்தை நடுவண் அமைச்சர் முன் மொழிந்திருக்க வேண்டும். ஒரு வீட்டிற்கு நாம் விருந்தினராக நாம் அழைக்கப்பட்டால் அந்த வீட்டிற்கு சென்று நம்முடைய வீட்டிக் பெருமையை பேசுவது நாகரீகமா ? அது போல தமிழகத்திற்கு விருந்தினராக வந்து இந்தி நாட்டில் மொழியை சிறப்பித்து பேசுவது எவ்வளவு அநாகரீகமானது என்பதை இந்தி மக்கள் சிந்திக்க வேண்டும். உலகின் தொன்மை மொழி தமிழ் தான் என்று உலகமே ஏற்றுக் கொண்ட காலத்தில் எந்த வித மொழி செழுமையும் இல்லாத இந்தி மொழியே சிறந்தது என்று கூறுவது எப்படிப்பட்ட கடைந்தெடுத்த அயோக்கியத் தனம் என்பதையும் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். இப்படிப்பட்ட மொழி இன மத வெறிபிடித்த பாஜக கட்சியினர் தமிழகத்தில் வாக்கு கேட்டு வந்தால் அவர்களுக்கு காட்டவேண்டியதை தமிழர்கள் நாம் காட்டுவோம். 
[vuukle-powerbar-top]

Recent Post