Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திராவிடர் கழகம் நடத்தும் தாலி அகற்றும் விழாவை தடுத்து நிறுத்த தமிழர் முன்னேற்றக் கழகம் காவல்துறை ஆணையரிடம் புகார் !

தமிழினத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் திராவிடர் கழகம் வரும் ஏப்ரல் 14 ஆம் நாம் தமிழ்ப் பெண்களின் தாலிகளை அறுக்கும் விழாவை அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு ஒரு தனி அமைப்பு சார்ந்த நிகழ்வாக இல்லாமல் , சமூக வலைத்தளங்களில் பொது நிகழ்வாக விளம்வரப் படுத்தி வருகிறது திராவிடர் கழகம். மேலும் இந்த நிகழ்விற்கு வருகை தருமாறும், தாலி அறுக்க பெண்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்து வருகிறது திராவிடக் கழகம். இப்படியான நிகழ்வு திட்டமிட்டு தமிழினத்தை கொச்சை படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. தாலி தான் தங்களுக்கு பாதுகாப்பு, புனிதம், மங்களம் என்று கோடிக்கணக்கான பெண்கள் கருதும் நிலையில் இப்படியான தாலி அறுக்கும் விழா தேவையற்ற மனக்கசப்பை மக்களிடம் ஏற்படுத்துகிறது. பல கோடி பெண்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அமைகிறது. அதனால் இந்த தாலி அறுக்கும் நிகழ்வை காவல்துறை தடை செய்ய வேண்டும் என்று தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் , மகளிர் அணியின் சார்பிலும் காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டது . ஏற்கனவே பல மதம் சார்ந்த அமைப்புகள் இந்த நிகழ்விற்கு தடை கோரி புகார் பதிவு செய்துள்ளனர். தமிழினம் சார்ந்து தமிழர் முன்னேற்றக் கழகம் புகார் செய்துள்ளது குறிபிடத்தக்கது.

இதையும் மீறி இந்த தாலி அறுக்கும் விழா நடைபெற்றால் இதை எதிர்த்து திராவிடர் தந்தையான ஈ.வே. ராமசாமியின் உருவப் படங்கள், உருவ பொம்மைகள் எரிக்கும் போராட்டங்களை பல தமிழ் அமைப்புகள் முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.



[vuukle-powerbar-top]

Recent Post