Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய நடுவண் அரசும் தமிழக அரசும் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு !

மக்களின் தனிமனித அடையாளங்களையும், விவரங்களையும் சேகரிக்கும் ஆதார் அட்டையை எந்த ஒரு முக்கியமான சேவைகளுக்கும் அரசு கேட்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பை வெளியிட்டது. இருப்பினும் இந்தத் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக இந்திய நடுவண் அரசும் மாநில அரசுகளும் ஆதார் அட்டையை பல்வேறு திட்டங்களுக்கு கட்டாயப்படுத்தி வருகிறது. வங்கிக் கணக்கு, எரிவாயு இணைப்பு போன்ற  எந்த சேவைகள் ஆனாலும் ஆதார் அட்டை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு நிறுவனங்கள் மக்களை கட்டாயப்படுத்தி வருகிறது.

இதன் உச்சகட்டமாக பொதுமக்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையில் கூட கைவைத்தது தேர்தல் ஆணையம். அதாவது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளது தேர்தல் ஆணையம். இதை தடுக்க வேண்டிய தமிழக அரசும் தேர்தல் ஆணையத்திற்கும் இந்திய அரசு நிறுவனங்களுக்கும் ஆதார் விடயத்தில் உறுதுணையாக நிற்கிறது.

இந்நிலையில் 16-03-2015 அன்று மீண்டும் உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை தொடர்பான வழக்கை விசாரித்தது. இந்த விசாரணையின் இறுதியில் நடுவண் அரசும் மாநில அரசுகளும் பொதுமக்களை ஆதார் அட்டை வேண்டுமென்று தொந்தரவு செய்யக்கூடாது என்றும், அடிப்படை சேவைகளுக்கு ஆதார் அட்டையை கேட்கக் கூடாது என்றும், அப்படி கட்டாயப்படுத்தினால் அரசு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்த நீதிமன்ற ஆணையை மதிக்கும் விதமாக இனியாவது பொதுமக்களிடம் ஆதார் அட்டை எடுக்க வேண்டும் என்றும் , சேவைகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் வேண்டுமென்றும் நடுவண் அரசும் தமிழக அரசும் கேட்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். மேலும் இதுவரை ஆதார் எண் பெற்றவர்களின் தனிமனித விவரங்கள் தனியார் நிறுவங்களுக்கு அரசு தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது. அப்படி தனிமனித விவரங்கள் தனியார் நிறுவங்களுக்கு சென்றால் அதற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.

இராச்குமார் பழனிசாமி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழ்நாடு)


[vuukle-powerbar-top]

Recent Post