Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மோடியின் இலங்கை பயணத்தை எதிர்த்து ஆளுநர் மாளிகள் முற்றுகை போராட்டம்!!

25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பிரதமர் இலங்கைக்கு செல்ல உள்ளார். கொடுங்கோலன் ராஜபக்சே தமிழர்களின் எதிர்ப்பை மீறி தில்லிக்கு அழைத்து வரப்பட்டான். அப்போதும் எந்த நிபந்தனையும் மோடி அரசு முன்வைக்கவில்லை. பிறகு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறிசேனா தில்லி வந்தார். அப்போதும் மோடி அரசு தமிழர்களுக்கு ஆதரவாக எந்த முன்னெடுப்பும் எடுக்காமல் இலங்கையுடன் பல ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. இப்போது மோடி இலங்கைக்கு பயணம் செய்கிறார். ஆனால் வழக்கம் போலவே   தமிழர்களின் சிக்கல் மற்றும் கோரிக்கை என எதுவும் மோடி காதில் வாங்கிப் போட்டுக் கொள்ளாமல் தான் மோடி இலங்க்கைக்கு செல்கிறார். காங்கிரஸ் அரசும் இதே போலவே தமிழர்களை அவமதித்தே வந்துள்ளது. மோடி அரசும் அதே அவமதிப்பை தான் செய்கிறது. மீனவர் சிக்கல் குறித்தும் பேசமாட்டார் மோடி என்று ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். ஈழத் தமிழர்கள் சிக்கல் பற்றி பெரிதும் பேசாமல் இந்தியா கட்டிக் கொடுக்கும் வீடுகளை தமிழ் மக்களுக்கு அர்ப்பணிக்க போகிறாராம் மோடி . உலகம் முழுவதும் இந்த செய்தியை தான் ஊடகங்கள் முக்கியப்படுத்தும். தமிழர்களுக்கான சர்வதேச விசாரணை, பொதுவாக்கெடுப்பு , ராணுவத்தை தமிழ் மண்ணில் இருந்து பின்வாங்க வைப்பது போன்ற எந்த கோரிக்கையையும் மோடி முன்வைக்கப் போவதில்லை .

பின்னர் எதற்காக மோடி இலங்கை செல்லவேண்டும் ? இனப்படுகொலை இலங்கைக்கு ஆதரவாக செயல்பட அவ்வளவு தூரம் மோடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மோடியின் இலங்கை பயணத்தை தமிழர்கள் நாம் கண்டித்தே ஆகவேண்டும் .

இதை கருத்தில் கொண்டு நாளை காலை 10 மணி அளவில் தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் திராவிட அமைப்புகளும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இப்போராட்டத்தை தோழர் தியாகு அவர்கள் ஒருங்கிணைப்பு செய்துள்ளார். தமிழீழத்திற்கான போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆர்வலர்கள் அவசியம் இப்போரத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இடம் : சைதை பனகல் மாளிகை அருகில் ஒன்றுகூடல்.



[vuukle-powerbar-top]

Recent Post