Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் மதத்தின் திருக்குறளும் ஆரிய மதத்தின் மனுதர்மமும் - ஒரு ஒப்பீடு !

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

என்ற திருக்குறளில், உயிர்களை கொன்றும், நெய் முதலிய பொருட்களை சொரிந்தும் ஆயிரம் வேள்விகளை செய்வதை விட, ஒரு உயிரை போக்கி அதன் ஊனை உண்ணாமல் இருத்தல் நல்லது ஆகும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர். இதுவே வள்ளுவர் வகுத்த அறமாகும்.

இதற்கு நேர் எதிராக மனுதர்மம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

" ஒரு பிராமணன், தன்னை புலால் உண்ணவேண்டும் என்று பிறர் கேட்டுக் கொள்ளும் போதும், விதிப்படி சிரார்த்தத்தில் (இறந்தவர்களுக்கு செய்யும் படையல்) வரிக்கப்பட்ட போதும், கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம்" என்றும்,

"அஜீ கர்த்தர் என்னும் முனிவர் நூறு பசுக்களை வாங்கிக் கொன்று வேள்வி செய்து, தமது பசியை தீர்த்துக் கொண்டார். அப்படி செய்தும் அவருக்கு பாவம் நேரிடவில்லை " (மனு தரும சாத்திரம்  அத் 10 சுலோ . 105 ) என்று மனுதர்மம் சொல்கிறது.

- இரா. நெடுஞ்செழியன் எழுதிய திருக்குறளும் மனு தருமமும் நூலில் இருந்து. திராவிடர் கழக வெளியீடு.

திராவிடக் கருத்தியல் கொண்டவர்களே தமிழர் அறத்தையும்  ஆரிய மதத்தின் அறத்தையும் ஒப்பிட்டு  நூல் வெளியிட்டு உள்ளனர்.  இனியாவது பிராமணர்கள் பசுவதைக்கும் புலால் உண்பதற்கும் எதிரானவர்கள் என்றும் தயவு செய்து யாரும் பொய்யான கருத்தை பதிவிட வேண்டாம். பிராமணர்கள் வரலாற்றில் அவர்கள் எப்போதும் உயிர்கொலைக்கும், புலால் உண்பதற்கும் எதிரானவர்கள் அல்ல என்பதை இதன் மூலம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

[vuukle-powerbar-top]

Recent Post