Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழர்களின் கவனத்திற்கு !!

அண்மையில் பாரத இந்து முன்னணி என்னும் ஆரிய மதவாத அமைப்பினர் காவல்துறையின் கெடுபிடிக்கு நடுவே பல இஸ்லாமிய , கிறிஸ்துவ தமிழர்களை தாய் மதத்திற்கு திரும்பும் நிகழ்வில் பங்குபெற வைத்தனர். தமிழர் கோவிலில் வைத்து மதம் மாறுவோர் மீது நீர் தெளித்து, அவர்கள் கைகளில் பகவத் கீதையை கொடுத்து தாய் மதத்தில் இணைப்பதாக கூறியுள்ளனர். இப்படியான நடவடிக்கை தமிழர்களை வருணாசிரம கொள்கையை கடைப்பிடிக்கும் ஆரிய மதத்திற்கு இட்டுச் செல்வதாகவே அமைகிறது. பகவத் கீதை என்பது ஆரிய இந்துமத நூல். இது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூலாகும். இதற்கும் தமிழர்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை. தமிழர் மதத்தின் கீழ் இந்நூல் வருவதும் இல்லை.

தமிழர்களுக்கு திருக்குறள் தான் புனித நூலாகும். மேலும் சைவம், வைணவம், சன்மார்க்கம், சித்தர் மரபு, தாய் தெய்வ வழிபாடு, மண் சார்ந்த கடவுளர் வழிபாடு ஆகிய மெய்யியல் கோட்பாடுகள் தான் தமிழர் சமயங்களாகும். தமிழர் சமயங்களில் நால்வருண கோட்பாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் இல்லை. ஆகவே தாய் மதம் திரும்புவோம் என நினைப்பவர்கள் மீண்டும் தமிழர் சமய நெறிக்கு திரும்ப வேண்டுமே தவிர ஆரிய இந்து மதத்தை தழுவக் கூடாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழர்களை தமிழர் சமயங்களை தழுவ விடாது ஆரிய மதத்தை திட்டமிட்டு திணிக்கும் இந்துத்வா சக்திகளை இனம் கண்டு அவர்களை தமிழர்கள் புறக்கணிக்குமாறு வேண்டுகிறோம். இத்தகைய ஆரிய மதவாதிகளிடம் இஸ்லாமிய கிருத்துவ மதத்தை தழுவிய தமிழர்கள் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் தாய் மதம் திரும்ப விரும்பினால் தமிழர் மதத்தையே தமிழர்கள் தழுவ வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- தமிழர் பண்பாட்டு நடுவம்.


[vuukle-powerbar-top]

Recent Post