Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழில் செயல்படுமா ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று பாஜக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மாநிலங்களான பஞ்சாப், காஷ்மீர், ஆசாமிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க திட்டமிட்டுள்ளது நடுவண் அரசு.

நம்முடைய கேள்வி என்னவெனில், நடுவண் அரசின் நிறுவனங்கள் எவையும் மாநில மொழிக்கும், மண்ணின் மைந்தர்களுக்கும் மதிப்பளிக்காத நிலையில் தமிழகத்தில் தொடங்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழில் இயங்குமா எனது தான். புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கான நுழைவுச் சீட்டு இந்தி மொழியில் கொடுக்கப்படுகிறது. மருத்துவர்கள் வடவர்களாகவே உள்ளனர். இந்த நிலைமை தமிழகத்திலும் வரக்கூடாது என்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் தொடங்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தித் திணிப்பு அறவே இருக்கக் கூடாது. தமிழர்களுக்கு தமிழ் மொழியும், பிற இனத்தவர்களுக்கு ஆங்கில மொழியும் அலுவல் மொழியாக இருக்க வேண்டும். 90 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் தமிழக அரசின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். இதை நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டும் என் இக்கோரிக்கையை தமிழக அரசுக்கு நாம் வைக்கிறோம்.  
[vuukle-powerbar-top]

Recent Post