Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய அரசின் நில அபகரிப்பு சட்டத்திற்கு அதிமுக ஆதரவு - தமிழகத்திற்கு செய்யும் துரோகம் !

பாராளுமன்றத்தில் நில அபகரிப்பு சட்டத்தை நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. காங்கிரெஸ் , திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க் கட்சிகள் பாஜகவின் நில அபகரிப்பு சட்டத்தை எதிர்த்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சி கூட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டது. ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அதிமுக நில அபகரிப்பு சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது . இது தமிழ் மக்களுக்கு திராவிட அரசு செய்யும் துரோகம் ஆகும். ஏற்கனவே தமிழகத்தில் கெயில் குழாய் பதிப்பு, அணு உலைகள் நிறுவுதல், நியூட்ரினோ போன்ற பல அபாயகரமான திட்டங்களை நடுவண் அரசு நிறைவேற்றி வரும் வேளையில் , இந்த நில அபகரிப்பு சட்டம் நிறைவேறினால் எளிதில் மக்களின் நிலங்களை அரசு கையகப்படுத்தலாம். இந்திய அரசு பல தேவையற்ற திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி வரும் நிலையில் இது தமிழகத்திற்கு பெரும் பின்னடைவாகும். மாநில சுயாட்சிக்கும் இந்த சட்டம் எதிரானதாகும்.

அதிமுக இந்த கொடுமையான திட்டத்திற்கு ஆதரவு அளித்தின் காரணம் அதன் சுயநல நோக்கமே அன்றி வேறில்லை. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் என்று வெளி வர வேண்டும் என்ற நோக்கும், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற நோக்கிலும் அதிமுக பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிகிறது. சுயநலத்திற்கு தமிழர்களின் இன நலனை அடகு வைத்துள்ளது இந்த திராவிட அரசு. சுயநலமே பெரிதென்று செயல்படுவது திராவிட அரசுக்களுக்கு இது புதிது அல்ல என்றாலும் தமிழகத்தின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக நில அபகரிப்பு சட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டது மிகப்பெரிய துரோகமாகவே பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பாஜகவிற்கு சேர்த்து வைத்து தமிழ் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.





[vuukle-powerbar-top]

Recent Post