Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்களை கொன்று குவித்த அமைதிப் படைக்கு மோடி வீரவணக்கம் செலுத்தினார் !! தமிழர்களை இதை விட யாரும் அவமானப்படுத்தி விட முடியாது !

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி தமிழர் நலனுக்காக எதையும் செய்யவில்லை. இருப்பினும் தமிழர்களை அவமானப் படுத்தாமல் இருக்கவில்லை மோடி. 1987 முதல் 1890 வரை ஈழத்தில் இந்திய அமைதிப் படையானது மிகப்பெரிய போற்குற்றங்களில் ஈடுபட்டது. தமிழ் மக்கள் பல்லாயிரம் பேர்களை கொன்று குவித்தது. ஆயிரக்கனக்கான  வீடுகளை சூறையாடியது. ஈழத் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது இந்திய அமைதிப் படை. இக்காலத்தில் தான் அதிக அளவு எண்ணிக்கையில் ஈழத் தமிழர்கள் தமிழீழத்தில் இருந்து அகதிகளாக வெளியேறினர். இப்படி சொல்ல முடியாத துயரத்தை இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்களுக்கு கொடுத்தது. இந்திய அமைதிப்படை நடத்திய போரின் போது தமிழீழ மக்களை காப்பாற்ற விடுதலை புலிகளும் பெரிதளவில் பதில் தாக்குதல் நடத்தி அமைதிப்படையை நிலைகுலைய வைத்தனர். முழுவதும் பெண்களே அடங்கிய விடுதலைப் புலிகளின் குழு இந்திய முகாம்களை தாக்கி  இந்திய ராணுவத்தை திக்குமுக்காட வைத்தனர். அப்போது தான் தமிழ்ப் பெண்களின் வீரத்தை உலகமே கண்டு வியந்தது. இப்போரில் பல ஆயிரம் இந்திய ராணுவத்தினரும் இறந்தனர். இறந்து போன இந்திய ராணுவத்தினர் யாரும் அப்பாவிகள் அல்ல . அனைவரும் போர்க் குற்றவாளிகள். இப்படியான குற்றவாளிகளுக்கு சிங்கள அரசு நினைவு மண்டபத்தை எழுப்பி உள்ளது. இந்த நினைவு மண்டபத்திற்கு இதுவரை பல இந்திய அரசு அதிகாரிகள் சென்று வீரவணக்கம் செலுத்தி வருகிறார்கள் . இது திட்டமிட்டு தமிழர்களை அவமதிக்கவே இலங்கை அரசு இந்த ஏற்பாட்டை செய்து வருகிறது . அந்த வகையில் இந்தியப் பிரதமர் மோடியும் அமைதிப் படையின் நினைவிடத்திற்கு சென்று போர்க் குற்றவாளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளார். இதை விட பெரிதாக தமிழர்களை யாரும் அவமதித்து விட முடியாது. பல்லாயிரம் தமிழ் மக்களை கொன்று தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த இந்திய ராணுவத்திற்கு இலங்கையில் மோடி வீர வணக்கம் செய்தது மன்னிக்க முடியாத செயல் . இதை தமிழர்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.



[vuukle-powerbar-top]

Recent Post