Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலக நுகர்வோர் நாளில் இந்திய அரசு வெளியிட்டுள்ள மோசடி விளம்பரம் !! 

நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற அடிப்படையில் கடைப்பிடிக்கப் படுவது தான் உலக நுகர்வோர் நாள். இந்நாளில் இந்திய அரசு நுகர்வோர்களின் உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்றும் நுகர்வோர்களுக்கு அதிகாரம் அளிக்கப் படுத்தல் வேண்டும் என்று நாளிதழில் விளம்பரம் செய்துள்ளது. இது எப்படியான மோசடி விளம்பரம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

நுகர்வோர்களின் அடிப்படை உரிமையே மொழி உரிமை தான். அதாவது அந்தந்த மாநில மக்கள் பேசும் மொழிகளில் அரசு , தனியார் நிறுவனங்களின் சேவைகள் வழங்கப்படுதல் வேண்டும். ஆனால் இந்தி நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்த பின்பும் இந்திய அரசின் சேவைகள் எவையும் மாநில மொழிகளின் வழங்கப்படுவது இல்லை. வங்கி, வருமானவரித் துறை, தொடர்வண்டித்துறை, வானூர்தி சேவைகள், கப்பல் சேவைகள், அஞ்சல் சேவைகள், வாழ்நாள் காப்பீடு , மக்கள் தொடர்பு சேவைகள் என எதிலும் இந்தியை மட்டும் திணித்து வருகிறது இந்திய அரசு. மாநில மொழிகளை திட்டமிட்டு புறக்கணித்து இந்திக்கு மட்டுமே இந்தியாவின் மொழியாக முன்னிறுத்துகிறது இந்தி அரசு . 

இது எவ்வளவு பெரிய மோசடி ? இப்படியான மோசடி அரசு நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்று சொல்வது இந்தி அல்லாத பிற தேசிய இனங்களை ஏமாற்றும் நயவஞ்சகம் ஆகும். இதை நாம் எதிர்க்காமல் இருந்தால் இந்தி அரசு மேன்மேலும் நம் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் . இந்தி அரசின் மொழித் தீண்டாமைக் கொள்கைக்கு முட்டுப் புள்ளி வைப்போம். நடுவண் அரசின் சேவைகள் அனைத்தும் நம் தாய் மொழியில் வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கையை வலுப்படுத்துவோம். 







[vuukle-powerbar-top]

Recent Post