Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காஷ்மீர் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் இந்திய தேசிய கொடியுடன் காஷ்மீர் தேசியக் கொடி !! 

காஸ்மீர் முதல்வர் முகமது சையது பதவி ஏற்பு விழாவில் இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் இந்திய தேசிய கொடியும் காஸ்மீர் தேசிய இனத்தின் கொடியும் சேர்ந்தே காணப்பட்டது. இதற்கு மோடியோ பாஜகவோ எந்த விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. முன்னதாக காஸ்மீர் தேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள மாநில சுயாட்சியை வழங்கக்கூடிய சிறப்பு சட்டப் பிரிவான 370 ஐ நீக்க வேண்டும் என்ற பாஜக கூறிவந்தது. ஆனால் இப்போதோ பாஜக அரசு காஷ்மீர் தேசத்தின் சிறப்பு சட்டப்பிரிவை நீக்கும் எண்ணம் இல்லை என்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது. 

இந்திய நாடு பிற தேசிய இனங்களை மதித்து நடந்து கொள்ளவேண்டும் என்பதே தேசிய இன மக்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் தேசிய இன அடையாளத்தை இந்தியம் மறுக்கும் போது தான் சிக்கல் உருவாகிறது. காஷ்மீர் போலவே தமிழகம், பஞ்சாப், மணிப்பூர், அசாம் போன்ற தேசிய இனங்களும் மொழியாலும் இனத்தாலும் ஒடுக்கப்பட்ட இனங்களாகும் . காஷ்மீர் தேசத்திற்கு இருப்பது போலவே அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் தேசிய கொடியும் தமிழர்களுக்கு நிச்சயம் தேவை. இந்திய தேசிய கொடியுடன் தமிழ்த் தேசிய கொடியும் இருந்தால் மட்டுமே தமிழர்களுக்கான அடையாளத்தை தக்க வைக்க இயலும். மேலும் காஷ்மீர் தேசத்திற்கு இருக்கும் நில உரிமை , தன்னாட்சி உரிமையை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 370 தமிழகத்திற்கும் கட்டாயம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் கட்சிகள் முன்வைக்க வேண்டும் . வரும் சட்டமன்ற தேர்தலில் இத்தகைய  கோரிக்கையை தங்கள் தேர்தல் அறிக்கையில் பகிரங்கமாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் முன்வைக்க வேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post