Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரசியல்வாதிகள் இந்த நாட்டை  நாசமாக்க உறுதுணையாக இருப்பதே இந்த கிரிக்கெட் விளையாட்டு !! 

நான்கு நாடுகள் தீவிரமாக விளையாடும் போட்டிக்கு உலகக் கோப்பை போட்டி என்று பொய்யாக பெயர் வைத்துக் கொண்டு, பெரும்பான்மையான போட்டிகளை பார்க்க திடலில் ஆளே இல்லாத நிலையில் விளையாடப்படுவது  தான் இந்த மக்களை மயக்கும்  ஏமாற்று விளையாட்டு கிரிக்கெட் . 

பல கோடி இந்திய நாட்டின் இளைஞர்களுக்கும், குடும்பங்களுக்கும் இந்திய தேசிய  பற்று என்னும் போதை ஊசி ஏற்றப்பட்டு அவர்களை சிந்திக்க விடாமல் செய்வது தான் இந்த தனியார் நிறுவனம் நடத்தும் இந்திய கிரிக்கெட் அணியின் மாபெரும் வணிக உத்தி.  இத்தகைய வணிக உத்தி பல பெருநிருவனங்களை வாழ வைத்தாலும் , உண்மையில் இப்போட்டிகளால் பெரும் இலாபம் அடைவது இந்தியத்தை ஆளும் அரசியல் கட்சிகளே. தொடர்ச்சியாக இந்திய மக்களுக்கும், தமிழர்களுக்கு பெரும் தீங்கு இழைக்கப்படும் சட்டங்கள் திட்டங்கலை இந்திய அரசு உருவாக்கும் போதெல்லாம் கிரிக்கெட் என்னும் மயக்கத்தை மக்களிடையே கொண்டு செல்லும் இந்திய அரசு . இந்திய அரசுக்கும் இந்திய தனியார் கிரிக்கெட் அணிக்கும் ஒரு சில ரகசிய ஒப்பந்தங்கள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் எப்போதெல்லாம் மக்கள் சிந்திக்கத் தொடங்குவார்களோ அப்போதெல்லாம் ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்துவார்கள் இந்த கிரிக்கெட் பெரு நிறுவனத்தினர். இது திட்டமிட்டு நடத்தப்படும் போட்டிகள் என்று இந்திய மக்கள் யாரும் அறிய மாட்டார்கள். தேசிய இன உரிமை சிக்கல், நிலம் அபகரிப்பு, பெரும் ஊழல், இந்திய அரசின் அராஜக கொள்ளை திட்டங்களுக்கு பெரும் உதவியாக இருப்பதும் இந்த கிரிக்கெட் விளையாட்டு தான். இதை மக்கள் எப்போதும் உணராத வகையில் இந்திய உளவுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது இந்த  தனியார் இந்திய கிரிக்கெட் அணி . 

இந்த போலியான, மக்களை ஏமாற்ற உருவாக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளால் இந்திய நாடு இழந்தது கொஞ்சநஞ்சமல்ல.  மக்களின் பொன்னான நேரம், உழைப்பு , பிற விளையாட்டுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், பிற படைப்புத்திறன், பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேராற்றல் என அனைத்தும் சீரழிக்கப்பட்டுள்ளது.   

இருப்பினும் மக்கள் இந்த பெரும் மயக்கத்தில் மீண்டு வருவது இயலாத காரியம் தான் . அதைத் தான் தனியார் இந்திய கிரிக்கெட் நிறுவனமும், இந்திய அரசு என்னும் பெரு நிறுவனமும் விரும்புகிறது. இதிலிருந்து விடுபட்ட சிறுபான்மை மக்களே அரசுக்கு எதிராக சில போராட்டங்களை மக்களுக்காக முன்னெடுக்கிறார்கள். அவர்களை சிரம் தாழ்ந்து வணங்குவோம். 




[vuukle-powerbar-top]

Recent Post