Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் வாழும் தெலுங்கு கன்னட இன மக்களுக்கு உகாதி திருநாள் வாழ்த்துகள் ! தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வேண்டுகோள் !

மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திர, கர்நாடக, கேரளா ஆகில மாநிலங்கள் பிரிந்தது. ஒவ்வொரு தேசிய இன மக்களுக்கும் ஒரு தேசம் கிடைத்தது. கடைசியாக எஞ்சி நின்ற தேசமே தமிழ்நாடாக வரையறை செய்யப்பட்டது. பிரிந்து போன தேசங்களில் அந்தந்த மாநிலங்களை அந்தந்த மாநில மக்களே இன்று வரை ஆட்சி செய்கின்றனர். வேற்றின மக்களை அவர்கள் அம்மாநிலங்களை ஆள விடுவதில்லை. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு இல்லை என்பது அனைவரும் அறிந்த செய்தியே .

தமிழகம் பிரிந்து 60 ஆண்டுகளாகியும் தமிழகத்தை இன்னும் ஒரு தமிழ்த் தேசிய இன மக்கள் ஆளவில்லை என்பது மிகவும் வருத்தமான செய்தி. தமிழகத்தில் திராவிடம் என்ற கருத்தை விதைத்த தமிழர் அல்லாதவர்கள் தமிழகத்தை எல்லா வகையிலும் ஆளுமை செலுத்தி வருகிறார்கள். அரசியலையும், ஆட்சியையும் அவர்களே கைப்பற்றி உள்ளனர். இதனால் தமிழகம் அனைத்தையும் இழந்த ஒரு ஆதரவற்ற தேசமாக உள்ளது.

இந்த நிலையை மாற்றவும், திராவிட கருத்தியலை உடைத்து , திராவிட அரசியலையும் தமிழகத்தில் இருந்து விரட்டி தமிழ்த் தேசிய அரசியலை நிலை நிறுத்த தமிழர்கள் தற்போது பலமான முயற்சியை மேற்கொண்டுள்ளோம். தமிழ்த் தேசிய அரசியல் பிற மொழியினருக்கு கேடு விளைவிக்கும் அரசியல் அல்ல. மாறாக பிற மொழியினருக்கு பாதுகாப்பு வழங்கும் அரசாகவே உருவெடுக்கும். தமிழர் அல்லாதவர்கள் இங்கு எல்லா நன்மைகளும் பெறலாம் . இருப்பினும் தமிழகத்தின் அரசியல் கொள்கைகள், மொழி பண்பாட்டு இயற்கை உரிமைக் கொள்கைகளை தமிழர்களே தீர்மானிப்பார்கள் . இது தான் எல்லா மாநிலங்களிலும் நடைபெறுகிறது . அதே நிலையை இங்கு தமிழர்கள் உருவாக்குவோம். அண்டை மாநிலங்களில் உள்ள தமிழர்கள் அந்தந்த தேசிய இன அரசியலை ஆதரிப்பது போலவே தமிழகத்தில் வாழும் கன்னட தெலுங்கு இன மக்கள் தமிழ்த் தேசிய அரசியலை ஆதரிக்க வேண்டும் என்று தமிழர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கன்னட தெலுங்கு இன மக்களுக்கு தமிழ்த் தேசிய இன மக்களின் உகாதி தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்த் தேசிய அரசியலுக்கு   உங்கள் முழு ஆதரவை நல்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.







   
[vuukle-powerbar-top]

Recent Post