Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக முதல்வரின் வீட்டிற்குள் புகுந்த இந்தி தேசிய கட்சியினர். காவல்துறையின் அலட்சியம் !

வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமி தொடர்வண்டி முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஆம் ஆத்மி கட்சியினர் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் முதல்வர் வீட்டின் மகிழுந்து நிறுத்தப்படும் இடம் வரை சென்று போராட்டம் செய்துள்ளது காவல்துறையை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அரிதினும் அரிதாகும். 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலட்சம்  தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் கூட யாரும் முதல்வரின் வீட்டை முற்றுகையிடவில்லை. ஆனால் இந்தி தேசியத்தை தழுவிய  காங்கிரஸ், பாஜக போன்ற கட்சியான ஆம் ஆத்மி கட்சி ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்காக முதல்வர் வீட்டை முற்றுகையிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மொழி , தமிழ் இனம், தமிழ் மண் சார்ந்து எந்த தேசிய இன சிக்கல்களுக்கும் வீதியில் வந்து போராட முன்வராத இந்திக் கட்சியான ஆம் ஆத்மி கட்சியில் எப்படி இத்தனை தமிழர்கள் இணைந்து முதல்வர் வீட்டை முற்றுகையிடும் அளவிற்கு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பது தமிழ் மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழர்களின் தேசிய இன சிக்கலுக்கு தமிழர்களே இன்னும் இப்படியான வீரியமான போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க தமிழக முதல்வரின் வீட்டிற்குள் யார் வேண்டுமானாலும் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்திவிடலாம் என்ற நிலை உருவாகி இருப்பது காவல்துறையின் அலட்சியத்தை காட்டுகிறது . இதுவே ஜெயலலிதாவின் வீட்டிற்குள் இவ்வாறு நுழைய முடியுமா ? அப்படி நுழைய காவல்துறை தான் விட்டுவிடுமா? பன்னீர் செல்வம் முதல்வராக இருப்பதால் தான் காவல்துறை அலட்சியமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

இன்னொரு புறம் போராட்டத்தில் பல பெண்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிகிறது. காவல்துறை போராட்டக் காரர்களை முன்னதாக கைது செய்திருந்தால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் வீட்டிற்குள் அனுமதித்து கைது செய்துள்ளனர். அதனால் பல பிரிவுகளின் கீழ் ஆம் ஆத்மி கட்சியினர் மீது வழக்கு தொடுத்து சிறையில் அடைத்துள்ளனர். நியாயமாக தண்டிக்கப்பட வேண்டியது காவல் துறையினரைத் தான். அதை விட்டு விட்டு போராட்டக்காரர்களை தண்டிப்பது நியாயமற்றது. தமிழக அரசு ஆம் ஆத்மி கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழக முதல்வர் வீட்டிற்கு உயர் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
[vuukle-powerbar-top]

Recent Post