Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சில நேரங்களில் உச்சநீதிமன்றம் தான் எளிய மக்களின் பாதுகாவலனாக இருக்கிறது என்பதற்கு அண்மைய தீர்ப்புகள் நல்ல எடுத்துக்காட்டு.

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்தை முடக்கும் சட்டமான 66 ஏ பிரிவு சட்டத்தை ரத்து செய்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் தனிப்பட்ட கருத்தை பதிவிடும் நபரை காவல்துறையால் கைது செய்ய இயலாது. இது கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

பகவத் கீதையை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என்று சங்க பரிவார் இயக்கத்தை சேர்ந்த பால கிருட்டிணன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்க இயலாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது. இது மதசார்பின்மைக்கு கிடைத்த வெற்றியாகும்.

அடுத்ததாக எல்லா அரசு சேவைகளுக்கும், வாக்களிக்கும் உரிமையை பெறவும் ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்ற அரசு கூறிவந்தது. தனிமனிதர்களின் அடிப்படை தேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயப் படுத்தக்கூடாது என்று உச்சநீதி மன்றம் அரசை கண்டித்துள்ளது. இது தனிமனித சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகும் .

[vuukle-powerbar-top]

Recent Post