Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வலுப்பெறும் தமிழ்த் தேசியம் ! கலக்கத்தில் திராவிடம் !!

திராவிடத்திற்கு எதிராக தமிழ்த்தேசிய அரசியல் வலுப்பெற தொடங்கி விட்டதை இப்போது ஊடகங்களும் பதிவு செய்யத் தொடங்கி விட்டன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

குமுதம் ரிபோர்ட்டர் இதழில் திராவிடர்கள் தமிழ்த் தேசியத்தை எதிர்கொள்ள ஒன்றாக கைக் கோர்க்க அணியமாகி வருகின்றன என்ற செய்தி வெளிவந்துள்ளது. திராவிடக் கருத்தியல் தமிழகத்தில் எடுபடவில்லை என்ற நிலையில் திராவிடத்திற்கு இறுதி மூச்சை கொடுக்க திராவிட கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றாக வேண்டியது அவசியம் என்ற நிலை வந்துள்ளதாக தெரிகிறது. இதில் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், வீரமணி போன்றோர்கள் நடத்தும் திராவிட இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பழுத்த திராவிடவாதியான கருணாநிதி செயல்படுகிறார் என்ற செய்தியையும் குமுதம் இதழ் அதிரடியாக வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியத்திற்கு எதிராக திராவிடர்கள் இப்போது ஒன்றாக இணைந்திருப்பதை தமிழ்த் தேசியர்கள் முழு வீச்சில் எதிர்கொள்ள அணியமாக வேண்டும். காரணம் பொய்யை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் திராவிடர்கள் தமிழ்த் தேசிய தலைவர்கள், இயக்கங்கள், ஆர்வலர்கள் மீது கடுமையான தனி மனித அவதூறு தாக்குதலில் ஈடுபடுவார்கள். தமிழர்களை மோசமானவர்களாக, சாதி வெறியர்களாக சித்தரித்து மக்களிடையே பொய்ப்பரப்புரையில் ஈடுபடுவார்கள். தமிழர்கள் எந்த நிலையிலும் ஆட்சி அதிகாரத்தையோ, சமூக ஆளுமையோ பெற்று விடக் கூடாது என்பதில் திராவிடர்கள் கவனமாக இருப்பார்கள்.

அதனால் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் பயணிக்கும் தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் திராவிடத்தை வீழ்த்த கடுமையாக போராட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். திராவிடத்தை வீழ்த்துவோம். தமிழ்த் தேசிய அரசியலை கட்டி எழுப்புவோம்.


[vuukle-powerbar-top]

Recent Post