Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெறுனர், 
உயர்திரு காவல்துறை ஆணையர் 
சென்னை
தமிழ் நாடு 


அன்புடையீர் வணக்கம், 

பொருள் : போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு ! 

ஆதார் அட்டையை மக்களிடையே கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கக் கூடாது என்றும், அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்றும், அடிப்படை மனித உரிமையை நிலைநாட்ட வேண்டி நடுவண் அரசையும், மாநில அரசையும் கண்டித்து போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதனால் இது குறித்த போராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அனுமதி வழங்கமாறு உங்களிடம் தாழ்மையுடன் வேண்டுகிறோம். இப்போராட்டத்தில் சுமார் 100 வரை கலந்து கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். போராட்டம் நடத்தும் தேதி : 03.04.2015 நேரம் காலை 10 மணி. 

என்றும் தமிழகப்பணியில் 

இராச்குமார் பழனிசாமி 
ஒருங்கிணைப்பாளர் குழு 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 






[vuukle-powerbar-top]

Recent Post