Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இப்படியும் ஒரு கோடைகால விடுமுறை வகுப்பை நாம் எடுக்கலாமே !!

இன்று தெருவில் பார்த்த இந்த விளம்பரத்தை கண்டு அதிர்ச்சியுற்றேன். பொதுவாக தேவையே இல்லாத பண்பாட்டை, கலைகளை  எல்லாம் கட்டணம் பெற்றுக் கொண்டு விடுமுறை வகுப்பு என்ற பெயரில் தமிழர்களிடையே திணிக்கின்றன  பல நிறுவனங்கள். ஆனால் திருக்குறள் வகுப்புகள் எடுக்கப்படும் என்று சொந்த செலவில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார் திருக்குறள் ஆர்வலர் ஒருவர் .

இவரிடம் உரையாடிய போது, இவர் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் வகுப்புகள் எடுக்கிறாராம். திருக்குறள் ஒப்புவித்தல் திறன் , திருக்குறள் பாடல் திறன் , திருக்குறள் பேச்சு திறன், ஆளுமை திறன், இசைத் திறன் என பல திறமைகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார் இந்த திருக்குறள் ஆர்வலரான திரு, ஆதிலிங்கம்.

தற்போது சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மட்டும் திருக்குறள் வகுப்பு எடுக்கும் இவர் , சென்னையில் உள்ள பல பகுதிகளுக்கும் நேரில் வந்து சொல்லிக் கொடுக்க அணியமாக உள்ளார் . அவரவர் பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஒன்று கூட்டினால் அங்கு வந்து திருக்குறள் வகுப்பு நடத்த அணியமாக உள்ளார் ஆதிலிங்கம் ஐயா . இவர் திருக்குரலரசு என மாத இதழையும் நடத்தி வருகிறார் . இவருடைய முயற்சிக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் முழு ஆதரவு வழங்குகிறது . தமிழ் மொழி , திருக்குறள் பற்றாளர்கள் இவரைப் போன்ற ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் . இவரிடம் திருக்குறள் ஆசிரியர் பயிற்சியும் இலவசமாக பெறலாம் .

கோடைகால வகுப்புக்கு பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அவரவரர் பகுதிகளிலும் திருக்குறள் வகுப்பெடுக்க உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் இதன் மூலம் வைக்கிறோம் . திரு. ஆதிலிங்கம் ஐயாவை மேற்படி விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் . நன்றி .





[vuukle-powerbar-top]

Recent Post